Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 2

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 2

எழுதியவர் Sindhuja SM
Jun 02, 2024
11:42 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி தொடர்கிறது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.6,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,320-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,560ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.2 குறைந்து ரூ.98க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியா 

கடந்த ஒரு வாரத்தில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

கடந்த ஞாயிற்றுகிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,655ஆக விற்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 55 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வாரம், ரூ.53,240க்கு விற்கபட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது ரூ.440 சரிந்து ரூ.53,680க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கு முன், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,260க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 60 ரூபாய் சரிந்துள்ளது. கடந்த வாரம், ரூ.58,080க்கு விற்பட்ட ஒரு சவரன் சுத்த தங்கத்தின் விலை, தற்போது ரூ.480 சரிந்து ரூ.58,560க்கு விற்கப்பட்டு வருகிறது.