LOADING...
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தால் கிடுகிடுவென சரிந்த கச்சா எண்ணெய் விலை
உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தால் கிடுகிடுவென சரிந்த கச்சா எண்ணெய் விலை

எழுதியவர் Venkatalakshmi V
Jun 15, 2026
07:58 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமையன்று (ஜூன் 15) உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. உலக எரிசக்தி விநியோகத் தட்டுப்பாடு நீங்கி, ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற சாதகமான சூழலால் சர்வதேச நிதி சந்தைகள் பெரும் எழுச்சி கண்டுள்ளன.

எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை 5% வரை வீழ்ச்சி

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, சந்தையில் புவிசார் அரசியல் அபாயங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதன் விளைவாக, சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஜூலை மாத விநியோகத்திற்கான அமெரிக்கக் கச்சா எண்ணெய் எதிர்கால விலை (WTI Crude) கிட்டத்தட்ட 5% சரிந்து பேரல் ஒன்றுக்கு $80.83 டாலராகக் குறைந்தது. அதேபோல், சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4% சரிந்து பேரல் ஒன்றுக்கு $83.77 டாலராக வீழ்ச்சியடைந்தது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகச் சந்தை

ட்ரம்ப் அறிவிப்பால் உலகச் சந்தைகளில் உற்சாகம்

தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப, "உலகக் கப்பல்களே, உங்கள் இன்ஜின்களைத் தொடங்குங்கள். எண்ணெய் தங்கு தடையின்றிப் பாயட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார். "ரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், அமெரிக்கக் கடற்படை முற்றுகை முழுமையாக அகற்றப்பட்டு ஹார்முஸ் நீரிணைப் பகுதி தடையின்றித் திறக்கப்படும் என்று ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார். உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (20%) கடந்து செல்லும் மிக முக்கிய நீர் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணை, கடந்த மார்ச் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க-ஈரான் மோதலால் கடுமையாக முடக்கப்பட்டிருந்தது. இந்த முடக்கம் நீங்குவதால் எரிசக்திச் சந்தை சீராகும் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.

Advertisement