Loading...
11 ஆண்டுகளுக்குப் பிறகு பிளிப்கார்ட்டிலிருந்து விலகும் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி: அடுத்த CEO யார்?
11 ஆண்டுகளுக்குப் பிறகு பிளிப்கார்ட்டிலிருந்து விலகும் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி

11 ஆண்டுகளுக்குப் பிறகு பிளிப்கார்ட்டிலிருந்து விலகும் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி: அடுத்த CEO யார்?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 25, 2026
02:13 pm

செய்தி முன்னோட்டம்

வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்தியாவின் முன்னணி மின்வணிக நிறுவனமான பிளிப்கார்ட் குழுமத்தின் CEO கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, தனது பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்துடனான 11 ஆண்டுகளுக்கும் மேலான நீண்டகாலப் பயணத்தை நிறைவு செய்யும் அவர், வரும் டிசம்பர் மாதம் பொறுப்பிலிருந்து விடைபெறுகிறார். இந்திய மின்வணிகத் துறையில் கடும் போட்டிகளுக்கு இடையே பிளிப்கார்ட் நிறுவனத்தை வழிநடத்திய அவரது விலகல், நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்யாண் கிருஷ்ணமூர்த்தியின் விலகலுக்கான துல்லியமான காரணங்கள் வெளியிடப்படாத நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், எதிர்பார்க்கப்படும் பங்குச் சந்தை அறிமுகத்திற்கும் வால்மார்ட் நிறுவனம் யாரை புதிய தலைவராக நியமிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கார்ப்பரேட் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

அவசரக் கூட்டம்

இடைக்காலத் தலைமைப் பொறுப்பு

கல்யாண் கிருஷ்ணமூர்த்தியின் பதவி விலகல் குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இன்று பிளிப்கார்ட் நிறுவனம் ஊழியர்களுடனான அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், டிசம்பர் 4-ஆம் தேதி அவரது இறுதிப் பணி நாளாக இருக்கும் என வால்மார்ட் இன்டர்நேஷனல் CEO கிறிஸ் நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.

புதிய CEO வரும் வாரங்களில் அறிவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை நிறுவனத்தின் தலைமைத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரியான (CPTO) பாலாஜி தியாகராஜன் நிர்வாகக் குழுவுடன் இணைந்து இடைக்கால செயல்பாடுகளைக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களிப்பு

பிளிப்கார்ட் நிறுவனத்தில் கல்யாண் கிருஷ்ணமூர்த்தியின் பங்களிப்பு

சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோரால் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்தில், 2013-ஆம் ஆண்டு இடைக்கால நிதி அதிகாரியாக பணியாற்றிய கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, முன்னதாக டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தவர்.

பின்னர் ஜனவரி 2017-இல் பிளிப்கார்ட் சிஇஓ-வாகப் பொறுப்பேற்ற அவர், 2018-இல் வால்மார்ட் நிறுவனம் 16 பில்லியன் டாலருக்குப் பிளிப்கார்ட்டை வாங்கிய பிறகு குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்தார்.

அமேசான் மற்றும் மீஷோ போன்ற நிறுவனங்களின் கடும் போட்டிகளுக்கு மத்தியில், நிறுவனத்தின் வர்த்தகத்தை ஐந்து மடங்கிற்கும் மேலாக விரிவுபடுத்திய பெருமை இவருக்கு உண்டு.

ADVERTISEMENT

சவால்

புதிய வர்த்தக விரிவாக்கம்

உணவு விநியோகத் துறை மற்றும் Gen Z வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட புதிய சேவைகளில் பிளிப்கார்ட் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ள சூழலில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

குறிப்பாக, பிளிங்கிட், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் செப்டோ ஆகியவற்றிற்குப் போட்டியாக Minutes என்ற விரைவு வர்த்தகச் சேவையை விரிவுபடுத்துவதில் அவர் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.

அதே சமயம், ஐபிஓ எனப்படும் பங்குச் சந்தை பட்டியலிடலில் ஏற்பட்டுள்ள தாமதம், பங்குரிமை பணமாக்கல் குறித்த ஊழியர்களின் அதிருப்தி மற்றும் கடந்த ஓராண்டில் பல மூத்த அதிகாரிகளின் வெளியேற்றம் போன்ற சவால்களை நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT