Loading...
IDBI வங்கி பங்கு விற்பனை எதிர்ப்பு: டிசம்பர் 3-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வங்கிச் சங்கங்கள் அழைப்பு
டிசம்பர் 3-ஆம் தேதி ஒற்றுமை வேலைநிறுத்த போராட்டத்திற்கு மூன்று முக்கிய வங்கிச் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன

IDBI வங்கி பங்கு விற்பனை எதிர்ப்பு: டிசம்பர் 3-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வங்கிச் சங்கங்கள் அழைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 19, 2026
03:13 pm

செய்தி முன்னோட்டம்

ஐடிபிஐ வங்கியில் அரசு வசமுள்ள பங்குகளை விற்பனை செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வரும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆதரவாக, வரும் டிசம்பர் 3-ஆம் தேதி ஒற்றுமை வேலைநிறுத்த போராட்டத்திற்கு மூன்று முக்கிய வங்கிச் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA), அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA) மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (BEFI) ஆகிய அமைப்புகள் இந்தப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

எதிர்ப்பு

"சுதேசி வங்கி விதேசி வங்கியாக மாறும்"

லாபகரமாக செயல்பட்டு வரும் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வது தேவையற்றது என வங்கி சங்கத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) இணைந்து ஐடிபிஐ வங்கியில் சுமார் 94% பங்குகளை கொண்டுள்ளன.

இதில் 60% பங்குகளை ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

"இதன் மூலம் ஒரு சுதேசி வங்கி, விதேசி வங்கியாக (வெளிநாட்டு வங்கியாக) மாறும். அந்நிய முதலீட்டாளருக்கு வங்கியை விற்பனை செய்யும் முடிவு முற்றிலும் நியாயமற்றது" எனச் சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நிதி நிலை

பொதுத்துறை வங்கிகளின் முக்கியத்துவம்

ஐடிபிஐ வங்கியின் மொத்த வைப்புத்தொகை:சுமார் ₹3.5 லட்சம் கோடி

ஐடிபிஐ வங்கியின் மொத்த கடன் வழங்கல்:சுமார் ₹2.5 லட்சம் கோடி

மொத்த வர்த்தக அளவு:சுமார் ₹6 லட்சம் கோடி (லாபகரமான வங்கி)

பொதுத்துறை வங்கிகளின் மொத்த வைப்புத்தொகை:₹250 லட்சம் கோடிக்கும் அதிகம்

தனியார்மயமாக்கல் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகளை விற்பனை செய்வது மக்களின் சேமிப்பை ஆபத்தில் ஆழ்த்தும் என வங்கிச் சங்கங்கள் எச்சரித்துள்ளன.

கடந்த காலங்களில் தனியார் வங்கிகளில் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டபோது, அவற்றை பொதுத்துறை வங்கிகளே ஏற்று நடத்தி பாதுகாத்ததை சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

₹250 லட்சம் கோடிக்கும் அதிகமான வங்கி வைப்புத்தொகை என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய சமூக மூலதனம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT