விதிகளுக்கு இணங்கத் தவறியதால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்
செய்தி முன்னோட்டம்
பயணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் தொடர்பான விதிகளுக்கு இணங்கத் தவறியதால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம்(DGCA) 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
டெல்லி, கொச்சி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில், DGCA சோதனை நடத்திய போது, ஏர் இந்தியா நிறுவனம், சிவில் ஏவியேஷன் ரிக்வியர்மென்ட்(CAR) விதிகளுக்கு இணங்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, நவம்பர் 3ஆம் தேதி, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு DGCA காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
டக்ஜ்வ்க்
ஏர் இந்தியா எந்த மாதிரியான விதிகளை மீறியது?
அந்த நோட்டீஸுக்கு ஏர் இந்தியா நிறுவனம் அளித்த பதிலின் அடிப்படையில், அந்த விமான நிறுவனம் CAR-இன் விதிகளுக்கு இணங்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக DGCA இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"தாமதமான விமானங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டல் தங்குமிட வசதிகளை வழங்காதது, விதிகளின்படி பணியாளர்கள் சிலருக்கு பயிற்சி அளிக்காதது மற்றும் பொருளாதார இருக்கைக்கு மாற்றப்பட்ட சர்வதேச வணிக வகுப்பு பயணிகளுக்கு இழப்பீடு வழங்காதது" ஆகிய காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதாக DGCA தெறிவித்துள்ளது.
இந்த தவறுகளுக்கு, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு DGCA 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.