தங்கள் விமானங்களுக்கு புதிய வர்த்தக அடையாளங்களை அறிமுகப்படுத்திய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
செய்தி முன்னோட்டம்
டாடா குழுமத்துடன் இணைந்து ஏர் இந்தியா நிறுவனமானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்களது புதிய வர்த்தக சின்னம் மற்றும் வர்த்தக அடையாளங்களை அறிமுகப்படுத்தியிருந்தது.
அதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு குறைந்த விலை விமான சேவை சேவை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும், தற்போது தங்கள் நிறுவன விமானங்களுக்கான புதிய வர்த்தக அடையாளங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஆரஞ்சு மற்றும் பசுநீல வண்ண நிறங்களால் ஆன புதிய வர்த்தக அடையாளங்களை தற்களது விமானங்களுக்கு அளித்திருக்கிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். இந்த புதிய வர்த்தக அடையாளங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வை மும்பை விமான நிலையத்தில் நடத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
ஏர் இந்தியா
இந்தியா பாரம்பரியத்தைக் கொண்டாடும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்:
தங்களுடைய புதிய போயிங் 737-8 விமானத்திற்கான வெளிப்புற டிசைனை பாந்தானி நெசவு வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.
இதனைத் தொடர்ந்து பயன்பாட்டிற்கு வரவிருக்கும் பிற விமானங்களிலும், இந்தியாவின் பிற நெசவு வகைகளான அஜ்ரா, படோலா, காஞ்சீவரம் மற்றும் கலாம்காரி உள்ளிட்டவற்றின் வடிவமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்புகளை வழங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
இதன் மூலம் இந்தியாவின் நெசவுப் பாரம்பரியத்தை கொண்டாடவிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். அடுத்த 15 மாதங்களுக்குள் 50 புதிய விமானங்களை தங்களுடைய சேவையில் இணைக்கத் திட்டமிட்டிருக்கிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 170 விமானங்களைக் கொண்ட விமான சேவை நிறுவனமாகவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.