புதிதாக கார் வாங்க திட்டமிட்டுக் கொண்டிருப்பவர்களே அலெர்ட்; டிசம்பர் 2026-ல் வெளியாகும் கார்களின் பட்டியல்
செய்தி முன்னோட்டம்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் டிசம்பர் 2026 மாதம் மிக முக்கியமான புதிய கார் அறிமுகங்களைக் காண உள்ளது. குறிப்பாக மாதத்தின் முதல் 3 நாட்களிலேயே புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் ஹோண்டா ஆல்பா எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஜேஎஸ்டபிள்யூ காம்பாட் எஸ்யூவி ஆகிய 3 பிரம்மாண்ட மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவை அனைத்தும் டிசம்பரிலேயே விற்பனைக்கு வராவிட்டாலும் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ள இந்த 3 கார்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
டொயோட்டா ஃபார்ச்சூனர்
டிசம்பர் 1-ல் உலகளவில் அறிமுகமாகும் புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர்
புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் வரும் டிசம்பர் 1 அன்று தென்னாப்பிரிக்காவில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில் 2027-ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.
புதிய ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஐஎம்வி லேடர்-ஃபிரேம் சேசிஸில் உருவாகும் இந்த காரில் பெரிய கிரில் ஸ்பிளிட் எல்இடி முகப்பு விளக்குகள் இரட்டை 12.3-இன்ச் திரைகள் வென்டிலேட்டட் இருக்கைகள் 360-டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு வசதிகள் இடம்பெற உள்ளன.
இதில் 48V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட 2.8-லிட்டர் டர்போ-டீசல் மற்றும் 2.7-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா ஆல்பா எலெக்ட்ரிக்
டிசம்பர் 2-ல் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டா ஆல்பா எலெக்ட்ரிக் எஸ்யூவி
ஹோண்டா நிறுவனம் தனது முதல் இந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் எஸ்யூவியான ஆல்பா இவி காரை வரும் டிசம்பர் 2 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
ராஜஸ்தானில் உள்ள தபுகாரா ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த கார் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
ஹோண்டாவின் 0 ஆல்பா கான்செப்ட் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு ஒளிரும் முன்பக்க பேனல் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் மல்டி-ஸ்கிரீன் கேபின் அமைப்புடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் பேட்டரி திறன் ரேஞ்ச் மற்றும் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
ஜேஎஸ்டபிள்யூ காம்பாட்
டிசம்பர் 3-ல் களமிறங்கும் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸின் முதல் காரான JSW காம்பாட் எஸ்யூவி
ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம் வரும் டிசம்பர் 3 அன்று இந்திய பயணிகள் கார் சந்தையில் அதிகாரப்பூர்வமாகத் தடம் பதிக்க உள்ளதோடு தனது முதல் 5-சீட்டர் காரான காம்பாட் எஸ்யூவியையும் அறிமுகப்படுத்துகிறது.
செரி ஜெட்டூர் டி2 மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட பிளக்-இன் ஹைப்ரிட் அமைப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எஞ்சின் மொத்தமாக 360hp பவர் மற்றும் 610Nm டார்க்கை வெளிப்படுத்துவதோடு மின்சாரத்தில் மட்டும் 90 கி.மீ தூரமும் மொத்தமாக 1,100 கி.மீ தூரமும் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.