LOADING...
மாருதி டிசையரை ஓரம் கட்டிய நெக்ஸான்; 10 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டி டாடா சாதனை
ஜனவரி 2026 கார் விற்பனையில் மாருதியை முந்தியது டாடா நெக்ஸான்

மாருதி டிசையரை ஓரம் கட்டிய நெக்ஸான்; 10 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டி டாடா சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Feb 02, 2026
02:32 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் கார் சந்தையில் 2026 ஆம் ஆண்டு ஒரு அதிரடி மாற்றத்துடன் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டாடா நெக்ஸான் தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் 23,365 யூனிட்களை விற்பனை செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் செடான் காரான மாருதி சுஸூகி டிசையரை அது பின்னுக்குத் தள்ளியுள்ளது. மேலும், நெக்ஸான் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தம் 10 லட்சம் விற்பனை மைல்கல்லையும் கடந்து சாதனை படைத்துள்ளது.

எஸ்யூவி

டாப் 10 பட்டியலில் எஸ்யூவிகளின் ஆதிக்கம்

இந்தியாவில் தற்சமயம் எஸ்யூவி ரக கார்களின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜனவரி மாத டாப் 10 விற்பனைப் பட்டியலில் 6 இடங்களை எஸ்யூவிகளே பிடித்துள்ளன. டாடா பஞ்ச் 19,257 யூனிட்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இது அறிமுகமான 4 ஆண்டுகளில் 7 லட்சம் விற்பனையை எட்டியுள்ளது. ஹூண்டாய் கிரெட்டா 17,921 யூனிட்களுடன் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. மாருதியின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியான விக்டோரிஸ், அறிமுகமான சில மாதங்களிலேயே 15,240 யூனிட்களுடன் டாப் 10 பட்டியலில் இணைந்துள்ளது.

ஜனவரி

ஜனவரி 2026 விற்பனை நிலவரம்

விற்பனைப் பட்டியலில் முதல் இடத்தை டாடா நெக்ஸான் (23,365 யூனிட்கள்) பிடிக்க, இரண்டாம் இடத்தில் மாருதி டிசையர் (19,629 யூனிட்கள்) உள்ளது. மூன்றாவது இடத்தில் டாடா பஞ்ச் (19,257 யூனிட்கள்) மற்றும் நான்காவது இடத்தில் ஹூண்டாய் கிரெட்டா (17,921 யூனிட்கள்) உள்ளன. ஐந்தாவது முதல் பத்தாவது இடங்களை முறையே மாருதி எர்டிகா (17,892), மாருதி ஸ்விஃப்ட் (17,806), மாருதி பிரெஸ்ஸா (17,486), மாருதி பலேனோ (16,782), மஹிந்திரா ஸ்கார்பியோ (15,542) மற்றும் மாருதி விக்டோரிஸ் (15,240) ஆகிய கார்கள் பிடித்துள்ளன.

Advertisement

மாருதி

மாருதியின் தனித்துவமான ஆதிக்கம்

டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் எஸ்யூவிகள் முதலிடங்களில் இருந்தாலும், டாப் 10 பட்டியலில் உள்ள 7 கார்கள் மாருதி சுஸூகி நிறுவனத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, செடான், ஹேட்ச்பேக் மற்றும் எம்பிவி பிரிவுகளில் மாருதியைத் தவிர வேறு எந்த நிறுவனமும் டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை. இது மாருதியின் பரவலான சந்தை பலத்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது. ஒட்டுமொத்த கார் சந்தையில் எஸ்யூவி ரக கார்களின் பங்கு இப்போது 55 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Advertisement