Loading...
டாடா மோட்டார்ஸின் BaaS திட்டம்: அனைத்து மின்சார கார்களுக்கும் விரிவாக்கம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது BaaS வசதியை அனைத்து எலக்ட்ரிக் கார்களுக்கும் விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் BaaS திட்டம்: அனைத்து மின்சார கார்களுக்கும் விரிவாக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 29, 2026
11:41 am

செய்தி முன்னோட்டம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பேட்டரி சேவை திட்டமான 'பேட்டரி-ஆஸ்-ஏ-சர்வீஸ்' (Battery-as-a-Service - BaaS) வசதியை தனது அனைத்து எலக்ட்ரிக் கார்களுக்கும் விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. BaaS திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் காரை வாங்கும்போது காரின் விலையையும், அதன் பேட்டரியின் விலையையும் தனித்தனியாக பிரித்து நிதியுதவி பெற முடியும். இதன் மூலம் காரின் ஆரம்பக்கட்ட தொடக்க விலை பெருமளவு குறைகிறது. பேட்டரிக்கான தவணைத் தொகையை (EMI) காரின் பயன்பாடு, பேட்டரியின் திறன் மற்றும் கடன்கால அளவைப் பொறுத்து தனியாக செலுத்திக் கொள்ளலாம்.

விலைப் பட்டியல்

தொடக்க விலைப் பட்டியல்

முன்பு Tiago.ev மற்றும் Punch.ev கார்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த வசதி, தற்போது Nexon.ev, Curvv.ev, Sierra.ev மற்றும் Harrier.ev ஆகிய மாடல்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

BaaS திட்டத்தின் கீழ் டாடா எலக்ட்ரிக் கார்களின் ஆரம்ப விலைகள்:

Tiago.ev: ₹4.69 லட்சம்

Punch.ev: ₹6.59 லட்சம்

Nexon.ev: ₹8.99 லட்சம்

Curvv.ev: ₹10.99 லட்சம்

Sierra.ev: ₹11.99 லட்சம்

Harrier.ev: ₹14.49 லட்சம்

போட்டி

அதிகரிக்கும் எலக்ட்ரிக் கார் போட்டி

எம்.ஜி (MG) மற்றும் மஹிந்திரா போன்ற பிற வாகன உற்பத்தி நிறுவனங்களும் இத்தகைய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், டாடா மோட்டார்ஸ் தனது பெரிய எஸ்.யு.வி கார்களுக்கும் BaaS திட்டத்தை விரிவுபடுத்தியிருப்பது சந்தை போட்டியை மேலும் அதிகரித்துள்ளது.

இத்திட்டத்திற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் டாடா மோட்டார்ஸ் கூட்டாண்மை வைத்துள்ளது.

ADVERTISEMENT