
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜியின் புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன் 2025 ஆஸ்டர் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா ₹9.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் 2025 ஆஸ்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த எஸ்யூவி மாடல் அதன் தற்போதைய பவர்டிரெய்னைத் தக்க வைத்துக் கொண்டாலும், மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக திருத்தப்பட்ட வேரியண்ட் வரிசை மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்ச விநியோகத்தைக் கொண்டுள்ளது.
புதிய ஷைன் வேரியண்ட், அதன் பிரிவில் ₹12.5 லட்சம் தொடக்க விலையில் பனோரமிக் சன்ரூஃப் வழங்கும் ஒரே எஸ்யூவியாக ஆஸ்டர் காரை ஆக்குகிறது.
செலக்ட் வேரியண்டில் இப்போது ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ஐவரி லெதரெட் இருக்கைகள் உள்ளன, இது பாதுகாப்பு மற்றும் ஆடம்பரத்தை மேம்படுத்துகிறது.
என்ஜின்
என்ஜின் மற்றும் முக்கிய அம்சங்கள்
எஸ்யூவி மேனுவல் மற்றும் சிவிடி விருப்பங்களுடன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினையும், தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினையும் தொடர்ந்து வழங்குகிறது.
ஆஸ்டர் எஸ்யூவி கார் காற்றோட்டமான முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் கூடுதல் வசதிக்காக ஆட்டோ-டிம்மிங் IRVM உள்ளிட்ட பல பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது.
மேம்பட்ட பயனர் இன்டெர்பேஸ் மற்றும் 80 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட i-SMART 2.0 அமைப்பையும் இது கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களில் திருட்டு எதிர்ப்பு அமைப்பு மற்றும் டிஜிட்டல் கீ செயல்பாடு ஆகியவை இடம்பெற்றுள்ளது. இது குறைந்த நெட்வொர்க் பகுதிகளில் கூட பாதுகாப்பை உறுதி செய்கிறது.