ஜாகுவார் நிறுவனத்தின் புதிய 'டைப் 01' மின்சார கார் அறிமுகம்: ரூ.1.84 கோடி விலையில் புதிய அவதாரம்
செய்தி முன்னோட்டம்
ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார், தனது புதிய தலைமுறை மின்சார வாகன வரிசையின் முதல் மாடலான 'டைப் 01' கிராண்ட் டூரர் காரை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, £130,000 (சுமார் $172,000 / இந்திய மதிப்பில் சுமார் ₹1.84 கோடி). இந்த காரின் முன்பதிவு 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படும். இந்த EV கார் இங்கிலாந்தின் சொலிஹல் ஆலையில் தயாரிக்கப்படவுள்ளது. இங்கிலாந்தில் புதிய கார்களின் விற்பனையை நிறுத்தி வைத்து, 2 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வந்த பிராண்ட் மாற்றத்திற்கு பிறகு ஜாகுவார் வெளியிடும் முதல் மாடல் இதுவாகும்.
அம்சங்கள்
'டைப் 01' காரின் முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்திறன்
'டைப் 01' காரின் இன்ஜின் திறன் 1,016 HP மற்றும் 1,365 Nm டார்க் ஆகும். இது, 0 - 100 கி.மீ வேகத்தினை 3.2 வினாடிகளுக்குள் எட்டும்.
இந்த மின்சார காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 644 கி.மீ வரை செல்லலாம்.
வெறும் 3 நிமிட பாஸ்ட் சார்ஜிங்கில் 322 கி.மீ தூரம் செல்லலாம். காரின் உள்புறத்தில் 24-இன்ச் கிளாஸ் OLED டிஸ்ப்ளே & 7-இன்ச் ஸ்மார்ட்போன் வகை டச் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் ஜாகுவார் நிறுவனம் வெளியிடும் முதல் புதிய கார் மாடல் இதுவாகும். நடுத்தர வயதுக் வாடிக்கையாளர்களை மட்டுமே நம்பியிருந்த ஜாகுவார், தற்போது இளம் தலைமுறையினரைக் கவரும் நோக்கில் தன் வடிவமைப்பை மாற்றியுள்ளது.