78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் TVS iQube கொண்டாட்ட பதிப்பு வெளியீடு
78வது சுதந்திர தினத்தை கொண்டாட நாடே தயாராகி வரும் நிலையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டரின் வரையறுக்கப்பட்ட 'கொண்டாட்ட பதிப்பை' அறிமுகப்படுத்தியுள்ளது - TVS iQube. TVS iQube கொண்டாட்ட பதிப்பு iQube இன் 3.4 kWh மற்றும் iQube S டிரிம்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பின் அறிமுகம், நாட்டில் 3.5 லட்சத்திற்கும் அதிகமான iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையையும் கொண்டாடுகிறது.
விலை மற்றும் இதர தகவல்கள்
TVS iQube 3.4 kWh 'Celebration Edition' ஆரம்ப விலை ₹ 1,19,628 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் TVS iQube S 'Celebration Edition' ஆரம்ப விலை ₹ 1,29,420 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. TVS iQube கொண்டாட்டம் பதிப்பு வகைகளுக்கான முன்பதிவுகள் ஆகஸ்ட் 15, 2024 அன்று திறக்கப்படும். மேலும் டெலிவரிகள் ஆகஸ்ட் 26, 2024 முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முன்பதிவுகள் மற்றும் டெலிவெரிகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. TVS iQube Celebration Edition ஆனது iQube 34 kWh மற்றும் iQube S ஆகிய இரண்டிலும் தலா 1,000 யூனிட்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.