LOADING...
பட்ஜெட் விலையில் பிரீமியம் கார்; வெறும் ₹5.99 லட்சத்தில் புதிய ஹூண்டாய் ஐ20
ஹூண்டாய் ஐ20 விலை குறைப்பு

பட்ஜெட் விலையில் பிரீமியம் கார்; வெறும் ₹5.99 லட்சத்தில் புதிய ஹூண்டாய் ஐ20

எழுதியவர் Sekar Chinnappan
Feb 05, 2026
07:45 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் காரான ஹூண்டாய் ஐ20, 2026 ஆம் ஆண்டிற்காகப் புதிய விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஹூண்டாய் நிறுவனம் இதன் ஆரம்ப விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது. தற்போது 2026 மாடல் ஐ20 காரின் ஆரம்ப விலை ₹5.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

புதிய 'Era' வேரியண்ட் மற்றும் வசதிகள்

இந்த விலை குறைப்பிற்காக 'Era' என்ற புதிய பேஸ் (Base) வேரியண்ட்டை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியுள்ளது. விலை குறைவாக இருந்தாலும், பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. அனைத்து வேரியண்ட்டுகளிலும் 6 ஏர்பேக்குகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டைப்-சி USB சார்ஜிங் போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பாடி கலர் கதவு கைப்பிடிகள் மற்றும் கண்ணாடிகள் (ORVMs), முன்புறம் மற்றும் பின்புறம் ஸ்கிட் பிளேட்கள் உள்ளன.

விலை குறைப்பு

நடுத்தர வேரியண்ட்டுகளில் விலை குறைப்பு

ஏற்கனவே சந்தையில் இருந்த மேக்னா வேரியண்ட்டுகளின் விலையும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஐ20 மேக்னா எக்சிகியூடிவ்: பழைய விலை ₹6.87 லட்சத்திலிருந்து தற்போது ₹6.74 லட்சமாகக் குறைந்துள்ளது. ஐ20 மேக்னா: பழைய விலை ₹7.12 லட்சத்திலிருந்து தற்போது ₹6.99 லட்சமாகக் குறைந்துள்ளது. மேக்னா எக்ஸிகியூட்டிவ் வேரியண்ட்டில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்ஸ் போன்ற வசதிகள் உள்ளன. மேக்னா வேரியண்ட்டில் எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் (LED DRLs) கூடுதல் சிறப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

Advertisement

செயல்திறன்

என்ஜின் மற்றும் செயல்திறன்

என்ஜின் ரீதியாகக் காரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. என்ஜின் ஆற்றல் 88 hp பவர் மற்றும் 114 Nm டார்க்காக உள்ளது. 5-ஸ்பீடு மேனுவல் அல்லது iVT (ஆட்டோமேட்டிக்) கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த விலை குறைப்பு மூலம் மாருதி பலேனோ மற்றும் மே 2025 இல் அப்டேட் செய்யப்பட்ட டாடா அல்ட்ராஸ் ஆகிய கார்களுக்கு ஹூண்டாய் ஐ20 கடுமையான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement