NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா!
    புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா!
    1/2
    ஆட்டோ 1 நிமிட வாசிப்பு

    புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 17, 2023
    02:04 pm
    புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா!
    ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்

    தயாரிப்புக்கு ஏற்றவகையில் இருக்கும் e:Ny1 எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. இந்த மாடல் தான் ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியாகவும் வெளியாகவிருக்கிறது. சர்வதேச சந்தையில் எஸ்யூவி செக்மண்டில் இந்த ஆண்டு ஹோண்டா வெளியிடவிருக்கும் மூன்று முக்கியமான மாடல்களில் இதுவும் ஒன்று. இதனையே கடந்த ஆண்டு ப்ரோட்டோடைப் மாடலமாக அறிமுகப்படுத்தியிருந்தது ஹோண்டா. 2021-ல் வெளியான ஹோண்டா HR-V க்ராஸ்ஓவருக்கு இணையான மாடல் என்றும் இதனைக் கூறலாம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு HR-V-யின் டிசைனை ஒத்திருப்பது போல் இருந்தாலும், இதன் அடிப்படைக் கட்டுமானமும், உள்புறமும் முற்றிலும் புதிதாக வடிமைக்கப்பட்டிருக்கிறது. தங்களது புதிய எலெக்ட்ரிக் கார்களை ஹோண்டா நிறுவனம் சீனாவில் மட்டுமே வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்ற சந்தைகளிலும் புதிய கார்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது ஹோண்டா.

    2/2

    எலெக்ட்ரிக் 'e:Ny1': 

    முன்பக்க ஆக்ஸிலில் 199hp பவர் மற்றும் 310Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய ஒரே ஒரு எலெக்ட்ரிக் மோட்டாரைப் பெற்றிருக்கிறது இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி. 8.0 நொடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டிப்பிடிக்கும் இந்த எலெக்ட்ரிக் காரானது 412 கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்களின் கார்களும் கிட்டத்தட்ட இதே ரேஞ்சையே கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு ஃபாஸ்ட் சார்ஜருடன் 45 நிமிடங்களில் 10-80% சார்ஜ் ஆகிவிடும் எனத் தெரிவித்திருக்கிறது ஹோண்டா. தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எதையும் அறிமுகப்படுத்தும் திட்டம் ஹோண்டாவிற்கு இல்லை. ஐரோப்பா மற்றும் பிற வெளிநாட்டு சந்தைகளில் மட்டுமே இந்தக் காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. எனினும், அடுத்த மாதம் தங்களது புதிய எலிவேட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஹோண்டா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஹோண்டா
    எஸ்யூவி
    எலக்ட்ரிக் கார்
    எலக்ட்ரிக் வாகனங்கள்

    ஹோண்டா

    இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள்.. பகுதி 2! பைக்
    இந்தியாவிற்கான புதிய மிட்சைஸ் எஸ்யூவி.. ஜூன் மாதம் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா! எஸ்யூவி
    இந்தியாவில் ஜூலை மாதம் என்னென்ன கார்கள் வெளியாகவிருக்கின்றன?  கியா
    ஹோண்டா ஆக்டிவா 125 vs சுஸூகி அக்சஸ் 125, இரண்டில் எது பெஸ்ட்?  ஆட்டோமொபைல்

    எஸ்யூவி

    மெர்சிடீஸ் பென்ஸாக மாறிய டாடா சுமோ.. வைரலான வீடியோ! டாடா
    இந்தியாவில் புதிய 'X3 M40i' எஸ்யூவியை வெளியிட்டுள்ளது BMW! பிஎம்டபிள்யூ
    செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தவிருக்கும் கியா.. என்னென்ன மாற்றங்கள்? கியா
    புதிய மாருதி சுஸூகி ஜிம்னி.. எப்போது வெளியீடு? மாருதி

    எலக்ட்ரிக் கார்

    இந்தியாவில் தங்கள் முதல் எலெக்ட்ரிக் காரை வெளியிடுத் திட்டமிட்டிருக்கும் ஸ்கோடா! எலக்ட்ரிக் வாகனங்கள்
    புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்.. இந்தியாவிலும் வெளியாகுமா? எஸ்யூவி
    'காமெட் EV' வேரியன்ட்களின் விலையை அறிவித்தது எம்ஜி மோட்டார்! எம்ஜி மோட்டார்
    இந்த மாதம் வெளியாகும் 2024 i5 எலெக்ட்ரிக் செடான்.. டீசர் வெளியிட்ட BMW பிஎம்டபிள்யூ

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    2027-ம் ஆண்டு முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பரிந்துரைக்கும் மத்திய அமைச்சகம்! மத்திய அரசு
    'மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை'களைக் கட்டமைக்கும் ஸ்வீடன்.. அப்படி என்றால் என்ன? ஆட்டோமொபைல்
    "இந்திய தயாரிப்பாளர்கள் தரமான உதிரிபாகங்களை தயாரிக்க வேண்டும்"- அமைச்சர் பியுஷ் கோயல்!  ஆட்டோமொபைல்
    வாடிக்கையாளர்களுக்கு சார்ஜருக்கான தொகையை திரும்ப அளிக்கவிருக்கும் ஓலா நிறுவனம் ஓலா
    அடுத்த செய்திக் கட்டுரை

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023