வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு: மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் காலாவதி விதிகளில் மத்திய அரசு மாற்றம்
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழின் (PUC) செல்லுபடியாகும் கால அளவை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (MoRTH) நவம்பர் 13-ஆம் தேதி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, புதிய BS-VI வாகனங்களுக்கு புதுப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள அதே வேளையில், பழைய வாகனங்களுக்கு அடிக்கடி பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் கீழ் மத்திய மோட்டார் வாகன (16-வது திருத்தம்) விதிகள், 2026 மூலம் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், அரசிதழில் வெளியிடப்பட்ட உடனேயே நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Alert : Big Relief for BS VI vehicle owner.
— Aseem Manchanda (@aseemmanchanda) November 19, 2026
Now Pollution Certificate can be made for 3 Years. pic.twitter.com/HQKnTYJ0ye
முக்கிய விதிகள்
PUC புதுப்பித்தல் நடைமுறை குறித்த முக்கிய விதிகள்
தற்போதைய PUC சான்றிதழ் காலாவதியாவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக புதுப்பிக்க விண்ணப்பித்தால், பழைய சான்றிதழ் காலாவதியாகும் தேதியிலிருந்தே புதிய சான்றிதழ் நடைமுறைக்கு வரும்.
சான்றிதழ் காலாவதியான பிறகு புதுப்பித்தால், புதுப்பிக்கப்படும் தேதியிலிருந்தே புதிய சான்றிதழ் செல்லுபடியாகும்.
புதிய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு பெறப்பட்ட சான்றிதழ்களுக்கு, அவை அடுத்த முறை புதுப்பிக்கப்படும்போது இந்தப் புதிய கால அளவு விதிகள் பொருந்தும்.