இந்தியாவில் புதிய கார்களை அறிமுகம் செய்தது மெர்சிடிஸ் பென்ஸ்
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2023 GLE எஸ்யூவி மற்றும் AMG C 43 4MATIC செடான் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்யூவியின் ஆரம்ப விலை ரூ. 96.4 லட்சமாகவும், செடான் காரின் ஆரம்ப விலை ரூ. 98 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ மற்றும் வால்வோ நிறுவன கார்களுக்கு போட்டியாக மெர்சிடிஸ் இந்த வகை கார்களை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது. மேலும், கார்களுக்கான முன்பதிவையும் நிறுவனம் தொடங்கியுள்ளது. 2023 GLE ஆனது GLE 300d, GLE 400d மற்றும் GLE 450 என மூன்று வேறுபட்ட என்ஜின் மாடல்களில் கிடைக்கிறது.
எஸ்யூவி மற்றும் செடான் மாடல்களின் சிறப்பம்சங்கள்
2023 GLE எஸ்யூவி மூன்று திறன் கொண்ட பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. மேலும் 266 எச்பி ஆற்றலுடன் இயங்கும் 2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின், ஒரு 362 எச்பி, 3.0-லிட்டர் ஆறு சிலிண்டர் டீசல் மோட்டார் மற்றும் 376 எச்பி, 3.0-லிட்டர் ஆறு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்களையும் கொண்டுள்ளது. AMG C 43 4MATIC செடான் காரானது அதன் இயக்கத்திறனை மேம்படுத்துவதற்காக பின்புற சக்கர திசைமாற்றி அமைப்புடன் வருகிறது. உயர்-செயல்திறன் கொண்ட செடான் ஐகானிக் பனமெரிகானா கிரில்லை இது வெளிப்படுத்துகிறது மற்றும் அனைத்து எல்இடி லைட்டிங் அமைப்புடன் ஏழு விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. C 43 2.0-லிட்டர், இன்லைன்-நான்கு-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் இயக்குகிறது. இது 48வோல்ட் மைல்ட்-ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.