1,00,000 முன்னாள் ராணுவ வீரர்களைத் தயாராக இருக்க அறிவுறுத்திய பிரிட்டன் அரசு; என்ன நடக்கிறது ஐரோப்பாவில்?
செய்தி முன்னோட்டம்
சர்வதேச அளவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 1,00,000 முன்னாள் ராணுவ வீரர்களுக்குக் கடிதம் அனுப்பி எதிர்கால போர் சூழலில் மீண்டும் பணியாற்ற தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டனின் ஸ்ட்ராடஜிக் ரிசர்வ் படையில் உள்ள ராணுவம் ராயல் கடற்படை மற்றும் ராயல் விமானப்படை ஆகிய முப்படைகளின் முன்னாள் வீரர்களுக்கு இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் போர் அல்லது கடுமையான தேசிய அவசரநிலை ஏற்பட்டால் அவர்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்தும் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம்
தொடர்பு விவரங்கள் மற்றும் புதிய திறன்களைப் புதுப்பிக்கக் கோரும் பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதங்களில் முன்னாள் வீரர்கள் தங்கள் தற்போதைய தொடர்பு விவரங்களை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், ஆயுதப் படைகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தாங்கள் ஈடுபட்டுள்ள தற்போதைய வேலை அனுபவம் மற்றும் புதிதாக கற்றுக்கொண்ட திறன்கள் குறித்த விவரங்களை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பனிப்போர் முடிவடைந்த பிறகு இந்தத் தரவுத்தளம் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில் முன்னாள் வீரர்களிடம் உள்ள தொழில்நுட்ப மற்றும் நிர்வாகத் திறன்களைத் துல்லியமாக அறிந்து கொள்ள அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
வெஸ் ஸ்ட்ரீட்டிங் விளக்கம்
உடனடி போர் அபாயம் இல்லை எனப் பாதுகாப்புச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் விளக்கம்
இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் பிரிட்டனும் அதன் நட்பு நாடுகளும் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இது ஒரு அறிவார்ந்த மற்றும் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என்றும் முன்னாள் வீரர்களைத் தொடர்பு கொள்வதால் பிரிட்டன் உடனடி போர் அபாயத்தை எதிர்கொள்கிறது என்று அர்த்தமல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு உறுதி
உடனடி பணி அழைப்பு இல்லை; தகவல் தொடர்பை வலுப்படுத்தும் நடவடிக்கை என அரசு உறுதி
கடிதம் பெறுவதால் முன்னாள் ராணுவ வீரர்கள் உடனடியாக பணிக்கு அழைக்கப்படுகிறார்கள் என்று அர்த்தமல்ல என பிரிட்டன் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சர்வதேச பதற்றங்கள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் நாட்டின் பாதுகாப்புத் தயார்நிலையை மேம்படுத்துவதும் தகவல் தொடர்புகளை புதுப்பித்து வைத்திருப்பதும் அரசின் முக்கியப் பொறுப்பாகும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்தால் வழக்கமான படைகளுக்கு துணையாக முன்னாள் வீரர்களை விரைவாக ஒருங்கிணைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.