உலகின் மிக விலையுயர்ந்த கோல்டன் விசா வழங்கும் நாடு எது தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கோடீஸ்வர தொழிலதிபர்களை குறி வைத்து கோல்டன் விசா வழங்குவதாக அறிவித்தார். 5 மில்லியன் டாலர் என கட்டணமும் நிர்ணயித்தார்.
ஆனால், கோல்டன் விசா வழங்குவது பல நாடுகளில் நடைமுறையில் இருக்கும் ஒரு பொருளாதார நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. காரணம் இந்த விசா பெறுவதற்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் லட்சங்களை தாண்டும்.
கோல்டன் விசா பெறுவதற்கு நீங்கள் அந்த நாட்டில் பிறந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
கட்டணம் கட்டி நீங்கள் அந்நாட்டின் குடிமகனாக மாறலாம், நாட்டின் குடிமக்களுக்குக் கிடைக்கும் பல சேவைகள் மற்றும் சலுகைகளைப் பெறலாம்.
ஆனால் கோல்டன் விசா பெற நீங்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும்? உலகின் மிகவும் விலையுயர்ந்த கோல்டன் விசா வழங்கும் நாடுகள் சில:
மால்டா
மால்டா- $6.2 மில்லியன்
மால்டா வழங்கும் ஒரு கோல்டன் விசாவிற்கு $6.2 மில்லியன் (கிட்டத்தட்ட ₹ 54 கோடி) செலவாகும்.
மேலும் இது சுமார் 190 நாடுகளுக்கு விசா இல்லாத அல்லது விசா-ஆன்-அரைவல் பயணத்தை வழங்குகிறது.
மால்டாவின் கோல்டன் விசா இருந்தால், உலகத் தரம் வாய்ந்த சர்வதேச பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான அணுகல் மற்றும் முழு குடியுரிமையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நாடுகளுக்கும் விசிட் செய்ய முடியும்.
உலகில் விலையுயர்ந்த கோல்டன் விசா வழங்கும் நாடாக தற்போது மால்டா உள்ளது.
UAE
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)- 2 மில்லியன் திர்ஹம்
ஐக்கிய அரபு அமீரகம் தனது கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 2 மில்லியன் திர்ஹம் (கிட்டத்தட்ட ₹ 4.75 கோடி) கட்டணத்தில் குடியிருப்பு வாய்ப்பை வழங்குகிறது.
இந்த கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு எமிரேட்களில் ஏதேனும் ஒன்றில் வசிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள்.
மேலும் அவர்களின் மனைவி அல்லது எந்த வயதினரையும் விசா திட்டத்தில் சேர்க்கும் வாய்ப்பையும் பெறுகிறார்கள், கூடுதல் செலவு இல்லாமல்.
இந்தியாவின் பல திரைநட்சத்திரங்களுக்கு இந்த வகை விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
EU
கோல்டன் விசா வழங்கும் மற்ற ஐரோப்பியா நாடுகள்
இத்தாலி- €250,000 -€2 மில்லியன் வரையிலான முதலீடுகளுக்கு கோல்டன் விசாக்களை வழங்குகிறது. இந்த விசா ஐரோப்பாவின் ஷெங்கன் பகுதிக்கு விசா இல்லாத பயணத்துடன் இத்தாலியில் வாழ, வேலை செய்ய மற்றும் படிக்க உரிமையை வழங்குகிறது.
கிரீஸ்- €250,000(சுமார் ₹ 2.35 கோடி) முதலீட்டின் மூலம் குடியிருப்பு விருப்பத்தை வழங்குகிறது, ஷெங்கன் பகுதிக்குள் விசா இல்லாத பயணத்தை வழங்குகிறது. ஏழு ஆண்டுகள் வசித்த பிறகு விசா வைத்திருப்பவர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் இது அனுமதிக்கிறது.
சைப்ரஸ்- குறைந்தபட்சம் €300,000(ரூ.2.82 கோடிக்கு மேல்) முதலீடு செய்யும் மக்களுக்கு கோல்டன் விசா கிடைக்கிறது. சைப்ரஸில் வசிக்கவும் படிக்கவும் உரிமையை வழங்குகிறது, நாட்டில் வசிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகை தர வேண்டும்.