Page Loader
3 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை சுட்டு கொன்ற 14 வயது மகள்: பாகிஸ்தானில் கொடூரம் 
இந்த பயங்கரமான சம்பவம் லாகூரில் உள்ள குஜ்ஜர்புராவில் நடந்தது

3 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை சுட்டு கொன்ற 14 வயது மகள்: பாகிஸ்தானில் கொடூரம் 

எழுதியவர் Sindhuja SM
Sep 24, 2023
01:55 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த ஒரு 14 வயது சிறுமி தன் தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த பிலால் கான் என்ற தன் தந்தையை செப்டம்பர் 23ஆம் தேதி காலை 6 மணிக்கு அந்த 14 வயது சிறுமி சுட்டுக் கொன்றார். இந்த பயங்கரமான சம்பவம் லாகூரில் உள்ள குஜ்ஜர்புராவில் நடந்தது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக தன்னை எப்படி பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்பதை பாதிக்கப்ட்ட சிறுமி விவரமாக அதிகாரிகளுக்கு அளித்த அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.

டிவ்க்ஹ்ன்

சுடப்பட்டவுடன் சம்பவ இடத்திலேயே உயிருழந்த பிலால் கான்

தொடர்ந்து அத்துமீறலுக்கு ஆளாகியதால் தான் சோர்வடைந்துவிட்டதாகவும், அதனால் தன் தந்தையை கொலை செய்ய முடிவெடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையான பிலால் கான் தையல்காரராக பணிபுரிந்து வந்தவர் ஆவார். அவர் சுடப்பட்டவுடன் சம்பவ இடத்திலேயே உயிருழந்தார். இந்நிலையில், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்திய பிறகு சந்தேக நபர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு தான், தனது மைனர் மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு நபருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.