LOADING...
அமெரிக்காவில் கட்டாய ராணுவ சேவை: இளைஞர்களை தானாக பதிவு செய்யும் புதிய சட்டம் விரைவில்
ராணுவக் கட்டாய ஆள்சேர்ப்பு முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது

அமெரிக்காவில் கட்டாய ராணுவ சேவை: இளைஞர்களை தானாக பதிவு செய்யும் புதிய சட்டம் விரைவில்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 09, 2026
03:03 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல தசாப்தங்களுக்குப் பிறகு தனது ராணுவக் கட்டாய ஆள்சேர்ப்பு முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது. இதன்படி, ராணுவ சேவைக்குத் தகுதியான இளைஞர்கள் இனி தானாகவே (Automatically) பதிவு செய்யப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போதுள்ள சட்டப்படி, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களும் 'தேர்வு சேவை அமைப்பில்' தங்களாகவே முன்வந்து பதிவு செய்வது கட்டாயமாகும். ஆனால், டிசம்பர் 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிகளின்படி, தகுதியுள்ள நபர்களை அரசே தனது தரவுத்தளங்கள் மூலம் நேரடியாகப் பதிவு செய்யும். வியட்நாம் போருக்குப் பிறகு அமெரிக்க ராணுவக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.

மாற்றம்

ஏன் இந்த அதிரடி மாற்றம்?

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய போர் பதற்றங்கள் காரணமாக, எந்நேரமும் தயார் நிலையில் இருக்க அமெரிக்கா விரும்புகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான 'தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தின்' கீழ் இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதுள்ள முறையில், 18 வயது பூர்த்தியான நபர்கள் 30 நாட்களுக்குள் பதிவு செய்யத் தவறினால் அது ஒரு கடுமையான குற்றமாகக் (Felony) கருதப்படுகிறது. அவ்வாறு செய்யாதவர்களுக்கு, கடும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அரசு வேலைகள் மற்றும் அரசின் சலுகைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும். ஏற்கனவே பல அமெரிக்க மாநிலங்களில் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கும்போது இந்தத் தகவல் இணைக்கப்பட்டிருந்தாலும், இனி நாடு முழுவதும் இது தானியங்கி முறையாக மாற்றப்படும்.

Advertisement