பாராளுமன்றத்தில் நிதி மசோதா தோல்வி; அமெரிக்க அரசு முடங்கும் அபாயம்
அமெரிக்க பெடரல் அரசிற்கான தற்காலிக நிதியை சேவ் சட்டத்துடன் இணைக்கும் ஹவுஸ் சபாநாயகர் மைக் ஜான்சனின் முன்மொழிவு புதன்கிழமை அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. 14 குடியரசுக் கட்சியினரும் மூன்று ஜனநாயகக் கட்சியினரும் வாக்களிக்கும்போது தங்கள் கட்சியின் முடிவுக்கு எதிராக வாக்களித்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை முடிவில் மசோதாவிற்கு ஆதரவாக 202 வாக்குகளும் எதிராக 220 வாக்குகளும் கிடைத்தன. இந்த தோல்வியால் அரசுக்கு தேவையான நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதிக்குள் மசோதாவை நிறைவேற்றத் தவறினால், பெடரல் அரசுக்கு நிதி இல்லாமல் போகும். இந்த சிக்கலை போக்க சபாநாயகர் ஜான்சன் மாற்றுத் திட்டம் குறித்து இரு கட்சிகளிடமும் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து என்ன நடக்கும்?
சபாநாயகர் ஜான்சன், மசோதாவின் முக்கிய கூறுகளை முன்னெடுத்துச் செல்வதாக கூறினார். சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் நாட்டிற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தவர்களில் சிலர் தேர்தலை மாற்றக்கூடும் என்ற கவலையை அவர் ஏற்றுக்கொண்டார். ஜனநாயகக் கட்சியினர் இதில் தீர்வு எட்டப்படாது என உறுதியாக நம்புவதால், ஒரு குறுகிய கால செலவின நடவடிக்கையில் இணைந்து பணியாற்ற குடியரசுக் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஹவுஸ் மற்றும் செனட்டில் உள்ள குடியரசுக் கட்சியினரை தேர்தல் பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்களைப் பெறாவிட்டால், மசோதாவிற்கு ஆதரவை வழங்கக் கூடாது என டொனால்ட் டிரம்ப் ஊக்குவித்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் $35 டிரில்லியனுக்கும் அதிகமான கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.