LOADING...
உலகையே உலுக்கும் கடல்வழிப் போர்: ஈரானின் கண்ணிவெடி படகுகள் தகர்ப்பு; வீடியோ ஆதாரம் வெளியிட்டது அமெரிக்கா
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா-ஈரான் இடையே தீவிரமடையும் போர்

உலகையே உலுக்கும் கடல்வழிப் போர்: ஈரானின் கண்ணிவெடி படகுகள் தகர்ப்பு; வீடியோ ஆதாரம் வெளியிட்டது அமெரிக்கா

எழுதியவர் Sekar Chinnappan
Mar 11, 2026
09:48 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் சூழல் ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் கண்ணிவெடி வைக்கும் 10 க்கும் மேற்பட்ட படகுகளை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ளன. இது குறித்த வீடியோ ஆதாரங்களை அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் வெளியிட்டுள்ளது. ஈரானுக்குள்ளேயே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் தனது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுத்து வருவதால் போர் தற்போது கடல் எல்லைக்கு நகர்ந்துள்ளது.

எச்சரிக்கை

கடல் எல்லையில் ஈரானின் எச்சரிக்கை மற்றும் கண்ணிவெடிகள்

அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியில் ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. "எதிரி நாடுகளின் எந்தவொரு கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க அனுமதிக்கப்படாது; சந்தேகம் இருந்தால் எங்களை நெருங்கிப் பாருங்கள்" என ஈரான் கடற்படைத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். சுமார் 6,000 நவீன ரகக் கண்ணிவெடிகளை ஈரான் இந்த குறுகிய கடல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வணிகக் கப்பல்களின் போக்குவரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

நெருக்கடி

உலகளாவிய எண்ணெய் சந்தையில் கடும் நெருக்கடி

இந்த மோதல் காரணமாக உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் பெரும்பகுதி கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. தற்போது நிலவும் போர் சூழலால் எண்ணெய் விநியோகம் தடைபட்டு, உலகெங்கிலும் எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஈரான் உடனடியாகக் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என எச்சரித்துள்ளார். இந்தத் தொடர் பதற்றத்தால் உலக நாடுகள் பெரும் பொருளாதார அதிர்ச்சியை எதிர்நோக்கியுள்ளன.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement