சென்னையில் தயாரித்த கண் மருந்தில் புதிய கிருமி: எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் உள்ள உயர்மட்ட மருத்துவ கண்காணிப்பு குழுவானது, இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளில் பலமான 'மருந்து எதிர்ப்பு கிருமிகள்' இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக கவலை எழுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் EzriCare Artificial Tears என்ற பிராண்டின் கீழ் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளால் மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் எட்டு பேருக்கு குருட்டுத்தன்மை ஏற்பட்டிருப்பதகவும் டஜன் கணக்கான நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்(CDC) தெரிவித்துள்ளன.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கண் மருந்துகளில் இருக்கும் 'மருந்து எதிர்ப்பு பாக்டீரியாக்கள்' அமெரிக்காவில் கால் பதிக்கக்கூடும் என்று CDC கவலை கொண்டுள்ளது.
இந்தியா
கண் சொட்டு மருந்துகளின் மாதிரிகளில் மாசு எதுவும் இல்லை: தமிழ்நாடு
தொற்று நோய் நிபுணர்கள், இந்த பாக்டீரியா இதற்கு முன்னர் அமெரிக்காவில் கண்டறியப்படவில்லை என்றும், தற்போதுள்ள ஆண்டிபயாடிக்குகளை கொண்டு இந்த பாக்டீரியாவுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநர் பி.வி.விஜயலட்சுமி, சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளின் மாதிரிகளில் மாசு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
"கேள்விக்கு உட்பட்ட மருந்துகளின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. எங்களுக்கு எந்த மாசும் இருப்பதாக தெரியவில்லை. மூலப்பொருட்களும் தரநிலைகளின்படி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது" என்று மருந்து ஒழுங்குமுறை இயக்குனர் கூறியுள்ளார்.
ஆனால், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்ட தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.