NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தானுக்கு பயணத் தடை விதிக்க டிரம்ப் திட்டம்: அறிக்கை
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானுக்கு பயணத் தடை விதிக்க டிரம்ப் திட்டம்: அறிக்கை
    பாகிஸ்தானுக்கு பயணத் தடை ?

    பாகிஸ்தானுக்கு பயணத் தடை விதிக்க டிரம்ப் திட்டம்: அறிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 07, 2025
    10:18 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் நாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கக்கூடிய புதிய பயணத் தடையை டிரம்ப் நிர்வாகம் அறிவிக்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பை அவர் பாராட்டிய சில நாட்களிலேயே இந்த திடீர் முடிவு வந்துள்ளது.

    நாடுகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அபாயங்கள் குறித்த அரசாங்க மதிப்பாய்வின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கான பயணத் தடை தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் இது அடுத்த வாரம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

    ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தவிர, பிற நாடுகளும் பயணத் தடை பட்டியலில் இருக்கலாம்.

    பாராட்டு

    காங்கிரஸ் உரையில் பாகிஸ்தானை பாராட்டிய டிரம்ப்

    செவ்வாயன்று காங்கிரசில் தனது முதல் உரையின்போது, 2021 ஆம் ஆண்டு காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க துருப்புக்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா குற்றம் சாட்டிய தலிபான் பயங்கரவாதி முகமது ஷரிபுல்லாவை கைது செய்வதில் இஸ்லாமாபாத்தின் ஒத்துழைப்பை டிரம்ப் பாராட்டினார்.

    "இந்த அரக்கனை கைது செய்ய உதவிய பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நான் குறிப்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது அந்த 13 குடும்பங்களுக்கும் மிகவும் முக்கியமான நாள், அவர்களில் பெரும்பாலோர் உண்மையில் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள், அவர்களின் குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும் ஆப்கானிஸ்தானில் அந்த துரதிர்ஷ்டவசமான நாளில் மோசமாக காயமடைந்த பலருக்கும் இது மிகவும் முக்கியமானது" என்று கூறினார்.

    தடை

    முந்தைய ஆட்சி காலத்திலும் சில நாடுகளுக்கு தடை விதித்தார் டிரம்ப்

    ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சியாளர்களுக்கு இஸ்லாமாபாத் ஆதரவளிப்பதாகக் கூறப்படுவது குறித்த கவலைகளால் அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன.

    இருப்பினும் பாகிஸ்தான் அத்தகைய ஆதரவை மறுக்கிறது.

    2017 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப், ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய ஏழு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுக்கு பயணத் தடையை அறிவித்தார்.

    பின்னர் அது ஜோ பைடனால் ரத்து செய்யப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டொனால்ட் டிரம்ப்
    பாகிஸ்தான்
    அமெரிக்கா

    சமீபத்திய

    கொந்தளிப்பில் LA நகரம்; கலவரக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படை வீரர்களையும், கடற்படையினரையும் இறக்கிய டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸ்
    29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மேற்கிந்திய தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் கிரிக்கெட்
    2025 WTC இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    ஆப்பிளின் iOS 26 கேமரா ஆப்-இல் பல புதிய முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்

    டொனால்ட் டிரம்ப்

    சனிக்கிழமைக்குள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும், இல்லையென்றால்...: ஹமாஸிற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப் ஹமாஸ்
    கூகுள் மேப்ஸில் ஒரே இடத்திற்கு, இரண்டு பெயர்கள்! அமெரிக்க வளைகுடாவா அல்லது மெக்சிகோ வளைகுடாவா?  கூகுள்
    வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதைத் தடைசெய்யும் சட்ட அமலாக்கத்தை இடைநிறுத்திய டிரம்ப் அமெரிக்கா
    உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து புடினுடன் விவாதித்த டிரம்ப்; விரைவில் சுமூக தீர்வு என நம்பிக்கை உக்ரைன்

    பாகிஸ்தான்

    கப்பலில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள் கைது  இந்தியா
    'பாகிஸ்தானை மதிக்கவும் இல்லையேல் அணுகுண்டு வீசுவார்கள்...': காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் எச்சரிக்கை காங்கிரஸ்
    பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஷெபாஸ் ஷெரீஃப் ஷெபாஸ் ஷெரீப்
    கிர்கிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் எச்சரிக்கை  இந்தியா

    அமெரிக்கா

    சுயசார்பு மற்றும் கூட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராணுவ தளபதி நம்பிக்கை இந்திய ராணுவம்
    119 நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுடன் இரண்டாவது அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது இந்தியர்கள்
    இந்தியாவில் வாக்குப்பதிவுக்கான 21 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா ரத்து செய்தது; வெளிநாட்டு தலையீடு என பாஜக குற்றச்சாட்டு இந்தியா
    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் இருந்த 2 கொலைக்குற்றவாளிகள் பஞ்சாப் காவல்துறையால் கைது பஞ்சாப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025