NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார் 
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார் 
    1/2
    உலகம் 1 நிமிட வாசிப்பு

    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார் 

    எழுதியவர் Sindhuja SM
    May 30, 2023
    03:10 pm
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார் 
    2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலால் புட்டவி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

    2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவிய லஷ்கர்-இ-தொய்பா(LeT) தலைவர் அப்துல் சலாம் புட்டவி, பாகிஸ்தான் சிறையில் மரணமடைந்தார். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த குற்றத்திற்காக அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலால் புட்டவி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார். லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் அப்துல் ரஹ்மான் மக்கியுடன் சேர்த்து புட்டவிக்கும் பயங்கரவாத நிதியுதவி வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 2020இல் புட்டவிக்கு 16.6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    2/2

    மாரடைப்பால் மரணமடைந்த பயங்கரவாத தலைவர் 

    2002 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது, ​​லஷ்கர் இடியின் செயல் தலைவராக புட்டவி பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில், பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய பல அமைப்புகள் நேற்று இரவு புட்டவியின் மரணத்தை அறிவித்தன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ஷேகுபுராவில் உள்ள சிறையில் நேற்று பிற்பகல் புட்டவி மாரடைப்பால் மரணமடைந்ததாக அந்த அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. லாகூர் முரிட்கேயில் உள்ள பயங்கரவாதக் குழுவின் மையத்தில் வைத்து இன்று காலை அவருக்கான இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இந்த இறுதிச் சடங்குகளைக் காட்டும் வீடியோவையும் லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி அமைப்புகள் வெளியிட்டுள்ளன. அவரது மரணத்தை இந்திய உளவுத்துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் விரிவான விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    மும்பை
    பாகிஸ்தான்
    தீவிரவாதிகள்

    இந்தியா

    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! மல்யுத்தம்
    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  டெல்லி
     9 ஆண்டுகால ஆட்சி நிறைவு: பிரதமர் மோடி ட்வீட் பிரதமர் மோடி
    FAME-II திட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றான வாகன தயாரிப்பு நிறுவனங்கள்! எலக்ட்ரிக் வாகனங்கள்

    மும்பை

    கைது செய்யப்பட்டதாக அமிதாப் பச்சன் இன்ஸ்டா பதிவு: அதிர்ச்சியான ரசிகர்கள் பாலிவுட்
    ஹெல்மெட் அணியாமல் பைக் ஒட்டிய விவகாரம்: பாலிவுட் நடிகையின் பாடிகாட்டிற்கு Rs 10,500 அபராதம் பாலிவுட்
    ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் பயணித்த பாலிவுட் நடிகர்கள்; போலீஸ் கேஸ் பாயுமா? பாலிவுட்
    மும்பை கடல் பகுதியில் புதிய கண்டுபிடிப்புகள்.. அறிவித்தது ONGC! மத்திய அரசு

    பாகிஸ்தான்

    32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா  உலக செய்திகள்
    பயங்கரவாத சதி அம்பலம்: 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!  இந்தியா
    எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 : ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்! கால்பந்து
    இம்ரான் கான் பிரச்சனை: தலைமை நீதிபதிக்கு எதிரான குழுவை அறிமுகப்படுத்துகிறது பாகிஸ்தான் அரசு இம்ரான் கான்

    தீவிரவாதிகள்

    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி  இந்தியா
    பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத சதி வழக்கு: 12 இடங்களில் NIA சோதனை இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023