
அமெரிக்காவில் இருந்துகொண்டு தமிழக அரசு பணிகளையும் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு கோப்புகளையும் பார்த்து வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக , கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் அதிகாரிகளுடன் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்க அமெரிக்கா சென்றார்.
இந்த பயணத்தின்போது பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழில் முதலீட்டை கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கூகுள் நிறுவனம் தொடங்கி பல்வேறு நிறுவனங்களும் அடங்கும். முதலில் சான் பிரான்சிஸ்கோ சென்ற முதல்வர் பின்னர் அங்கிருந்து சிகாகோ சென்றார்.
அரசு கோப்புகள்
தமிழக அரசு பணிகளையும் கவனிக்கும் முதல்வர்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளதால், தமிழக அரசு துறைகளில் அவரது ஒப்புதல் பெறவேண்டிய கோப்புகள் தேங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், முதல்வரின் எக்ஸ் பதிவு அப்படி இல்லை என நிரூபித்துள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது." என்று பதிவிட்டு, தான் கோப்புகளில் கையெழுத்திடும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே சிகாகோவில் மட்டும் ரூ.3,050 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன.
— M.K.Stalin (@mkstalin) September 7, 2024
அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது... pic.twitter.com/WeuWB1B4yn