தமிழ் மண்ணில் இருப்பது போன்ற உணர்வு; சிகாகோ நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட நிலையில், சிகாகோவில் தமிழர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அதில் பேசிய முதல்வர், "அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் எனத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் எப்படியிருக்குமோ அதைவிட சிறப்பான ஒரு உணர்வை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது." என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்களையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
முதல்வர் ஸ்டாலினின் எக்ஸ் பதிவு
#Chicago-வில் தமிழ் உடன்பிறப்புகளுடன்! pic.twitter.com/MwZC0hRWYf
— M.K.Stalin (@mkstalin) September 8, 2024