துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள்
துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை(பிப் 6) ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 16,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராடி கொண்டிருக்கும் மீட்புப் பணியாளர்களின் வேலையை கடுமையான குளிர் இன்னும் கடினமானதாக்கி இருக்கிறது. மேக்ஸர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரும் சேதங்கள் தெளிவாகத் தெரிகிறது. உயரமான கட்டிடங்கள் இருந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான அவசரகால நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது இந்த படங்கள் மூலம் தெரிகிறது. துருக்கியில் உயிர் பிழைத்தவர்கள் உணவுக்காகவும் தங்குமிடத்திற்காகவும் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் தங்கள் உறவினர்களும் குடும்பத்தினர்களும் சிக்கி இருப்பது தெரிந்தும் அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியாத நிலைக்கு சிலர் தள்ளப்பட்டுள்ளனர்.