
தலைநகரில் குவிக்கப்படும் படைகள்; பங்களாதேஷில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமா?
செய்தி முன்னோட்டம்
சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் நாடு முழுவதும், குறிப்பாக டாக்காவில் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு பற்றிய ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன.
இது தொடர்பான வதந்திகள் சமூக ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன. இருப்பினும் இடைக்காலத் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸோ அல்லது ராணுவத் தலைவர் வக்கார் உஸ் ஜமானோ நிலைமை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
யூனுஸுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த முன்னேற்றங்களின் மையத்தில் ஜெனரல் வக்கார் உஸ் ஜமான் இருப்பதாகக் கூறப்படுகிறது.
உயர் ராணுவ உதவியாளர்களுடனான அவரது சமீபத்திய சந்திப்புகளும், அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்த எச்சரிக்கைகளும் அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்த ஊகங்களைத் தூண்டிவிட்டன.
மறுப்பு
வதந்திகள் என வங்கதேச அரசு மறுப்பு
இருப்பினும், பங்களாதேஷ் உள்துறைச் செயலாளர் நசிமுல் ஹக் கனி, அவசரநிலை பிரகடனம் குறித்த பேச்சை வதந்திகள் என்று நிராகரித்தார்.
இதற்கிடையே, ராணுவத்திற்குள் உள்ள பாகிஸ்தான் சார்பு குழுக்கள் ஜெனரல் வக்கார் உஸ் ஜமானை நீக்குவதற்கு சமீபத்தில் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளன.
எனினும், அவர் சதியை முறியடித்து ராணுவத்தின் மீது உறுதியான கட்டுப்பாட்டைப் பேணுவதாகத் தெரிகிறது.
மாணவர் தலைவர் அசாதுஸ்மான் ஃபுவாட், ராணுவ தளபதி ஜனாதிபதி முகமது ஷாபுதீனுடன் இணைந்து புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க சதி செய்ததாக குற்றம் சாட்டினார்.
இது பங்களாதேஷில் அரசியல் புயலை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.