Page Loader
ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த தலிபான்கள் மும்முரம் 
தாலிபான்கள் தங்கள் பாணியிலான ஷரியா சட்டத்தை ஆப்கானிஸ்தானில் அமல்படுத்த விரும்புகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த தலிபான்கள் மும்முரம் 

எழுதியவர் Sindhuja SM
Aug 08, 2023
07:16 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அந்நாட்டை ஆளும் தாலிபான் அரசு வலியுறுத்தி வருகிறது. தலிபான்களால் நியமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் தற்காலிக உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி சமீபத்தில் மத குருமார்கள், பழங்குடியின பெரியவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "முதலில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவ வேண்டும். அது தான் எங்களது முதல் கடமை" என்று கூறியுள்ளார். மேலும், "ஷரியாவை அமல்படுத்தி, தாலிபான் அரசாங்கம் நிலைத்திருப்பதை உறுதி செய்வதன் மூலமாக, நாங்கள் நாட்டை புனரமைத்து ஜிஹாத் செய்வோம்," என்று அவர் பேசியுள்ளார். இஸ்லாம் மதத்திற்கு எதிரானவர்களை எதிர்த்து போராடுவது 'ஜிஹாத்' என்று அழைக்கப்படுகிறது.

ஜேடில்

ஷரியா சட்டத்தின் மூலம் கொடூர தண்டனைகளை அமல்படுத்துமா தாலிபான்?

தாலிபான்கள் தங்கள் பாணியிலான ஷரியா சட்டத்தை ஆப்கானிஸ்தானில் அமல்படுத்த விரும்புகிறார்கள். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், பொது இடங்களில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவது, உடல் உறுப்புகளை வெட்டுவது மற்றும் கசையடிகள் போன்ற அனைத்து தணடனைகளும் ஆப்கானிஸ்தானில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படும். ஏற்கனவே மனித உரிமைகள் ஆப்கானிஸ்தானில் மீறப்படுவதாக பல குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஷரியா சட்டம் குறித்த பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிகிறது. 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்ததில் இருந்து, மனித உரிமைகளுக்கு எதிராக பல விதிகளை தாலிபான் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்னதாக, 1996 முதல் 2001 வரை தாலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது, பொது மரணதண்டனை, கல்லெறிதல், கசையடி மற்றும் உடல் உறுப்புகளை துண்டித்தல் போன்ற வன்முறை தண்டனைகள் அமலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.