மனித உரிமைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள விஷயங்களின் பட்டியல்
ஆகஸ்ட் 2021இல் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை பெண்களின் சுதந்திரத்திற்கு எதிராக பல தடைகள் ஆப்கானிஸ்தானில் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி, தாலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் தடை செய்திருக்கும் விஷயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம். பெண்கள் பொது இடங்களில் முகத்தை மறைக்க உத்தரவு பொது இடங்களில் பெண்கள் முகத்தை காட்டகூடாது என்றும், எப்போதும் ஹிஜாப் அணிந்து முகத்தை மறைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஐ.நா.வில் வேலை செய்ய பெண்களுக்கு தடை ஆப்கானிஸ்தானில் இனி எந்த ஆப்கானிய பெண்களும் ஐநாவில் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தலிபான் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கானித்தானில் வேலை செய்யும் ஐநா அதிகாரிகள் யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று கடந்த ஏப்ரல் மாதம் ஐ.நா அறிவுறுத்தியது.
ஆறாம் வகுப்பிற்கு மேல் பெண்கள் படிக்க தடை
ஏப்ரல் 2023இல், பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் கல்வியைத் தொடர தாலிபான்கள் தடை விதித்தனர். மனிதாபிமான அமைப்புகளில் பெண்கள் வேலை செய்ய தடை டிசம்பர் 2022இல், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளில் வேலை செய்ய பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்களுக்குச் செல்ல தடை பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்கள் போன்ற இடங்களுக்கு பெண்கள் செல்ல நவம்பர் 2022இல் தடைவிதிக்கப்பட்டது. பெண்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் ஆண் உறவினர் இல்லாமல் ஒரு பெண் 72 கிமீக்கு மேல் பயணம் செய்ய 2021இல் தடைவிதிக்கப்பட்டது. ஆண் உறவினர் இல்லாமல் விமானங்களில் பயணம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுபோக, தற்போது, பெண்களின் அழகு நிலையங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.