Page Loader
இலங்கையிடமிருந்து கச்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி 
இலங்கையிடமிருந்து கட்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி

இலங்கையிடமிருந்து கச்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி 

எழுதியவர் Nivetha P
Aug 21, 2023
12:41 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா-இலங்கை இடையே 285-ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கச்சத்தீவு கடந்த 1974ம்ஆண்டு வரை இந்தியாவின் கைவசம் இருந்துள்ளது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நல்லெண்ணம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 1974ல்-ஜூலை.,8ம்தேதி இலங்கை கைவசம் கட்சத்தீவினை ஒப்படைத்துள்ளார். தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தில் 1976ல் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டநிலையில், மன்னர் வளைகுடா பகுதியில் இந்தியாவை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இதிலிருந்து தான் தமிழக மீனவர்களுக்கு அந்நாட்டு ராணுவத்தினரும்-மீனவர்களும் தொந்தரவு தரத்துவங்கியுள்ளனர். இதனடிப்படையில் தான் கச்சத்தீவினை மீட்கவேண்டும் என்னும் கோரிக்கை எழத்துவங்கியது. ஆனால் இதனைத்தாண்டி இத்தீவினை மீட்க வேறுசில காரணங்களை மத்திய பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தற்போது எடுத்துரைத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, சிலநாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின்'எய்டு-டேட்டா'என்னும் ஆய்வுக்கூடம் ஓர் ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஆய்வறிக்கை 

கொழும்பு தாமரை கோபுரத்தில் உளவுப்பார்க்கும் சாதனங்களை பொருத்தியுள்ள சீனா 

மேலும் அவர், இலங்கை ஹம்பந்தோட்டாவிலுள்ள துறைமுகத்தினை தனது கடற்படை தளமாக கைவசப்படுத்துவதற்கான பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. இப்பணிகள் 2 ஆண்டுகளில் முடியும் பட்சத்தில், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்பதோடு இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று தெரிகிறது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்பொழுது, இந்நாட்டின் தென்பகுதியில் காலூன்றிய சீனா, தற்போது கிழக்கு மற்றும் வடக்கு மாகணங்களையும் தன்வசப்படுத்த முயற்சித்து வருகிறது. அதன்படி, கடந்த 2019ல் திறக்கப்பட்ட கொழும்புவிலுள்ள தாமரைக்கோபுரத்தினை வடிவமைத்த சீனா, அதில் உளவுப்பார்க்கும் சாதனங்களை பொருத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, கச்சத்தீவினை மீட்டு அங்கு இந்தியா படைத்தளம் அமைத்தால் மட்டுமே சீனாவால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் இந்தியாவில் ஏற்படுவதை தடுப்பதோடு, அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளமுடியும் என்று அவர் கூறியுள்ளார்.