பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளார்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது புற்றுநோய் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் அவர் அரச கடமைகளுக்கு அதிகாரப்பூர்வமாக திரும்பும் தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும், அவர் "100% மீண்டும் மீண்டு வருவார்" என்று வேனிட்டி ஃபேருக்கு ஆதாரங்கள் உறுதிப்படுத்தின. இளவரசி தனது சிகிச்சைக் காலத்தில் ராயல் ஃபவுண்டேஷன் சென்டர் ஃபார் எர்லி சைல்டுஹுட் மற்றும் அதன் பணிக்குழுவின் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவரது உடல்நலம் இப்போது அவரது முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.
இளவரசி கேட் மிடில்டனின் உடல்நிலை முன்னேற்றம்
கிறிஸ்மஸ் தினத்திலிருந்து அரச கடமைகளுக்காக பொதுவெளியில் தோன்றுவதிலிருந்து விலகியிருந்த மிடில்டன், தனது தடுப்பு கீமோதெரபி சிகிச்சையால் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வேனிட்டி ஃபேரிடம் தெரிவித்ததன்படி,"அவர் மருந்துகளை பொறுத்துக்கொள்கிறார் என்பதும், உண்மையில் மிகவும் சிறப்பாக செயல்படுவதும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நிச்சயமாக, இது மிகவும் சவாலான மற்றும் கவலையளிக்கும் நேரமாக இருந்தது. அனைவரும் அவருடனே இருக்கின்றனர்-இளவரசர் வில்லியம், அவரது பெற்றோர், மற்றும் அவருடைய சகோதரி மற்றும் சகோதரன்". இளவரசி கேட் பங்கெடுக்க முடியாத நிலையில், இளவரசர் வில்லியம் அரச கடமைகளை நிறைவேற்றி வருகிறார்.
மருத்துவக் குழு ஒப்புதல் அளித்த பிறகு அவர் பணிக்குத் திரும்புவார்
அந்த செய்தியின்படி, இளவரசி பணிக்கு திரும்புவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை அதேபோல அவசரமும் இல்லை. இளவரசி குணமடைந்த பின்னர், மருத்துவக் குழுவிடமிருந்து ஒப்புதல் கிடைக்கும் போது அவர் பணிக்கு திரும்புவார். இளவரசி கேட் மிடில்டன் கடந்த மார்ச் மாதம் தான் புற்றுநோயால் கண்டறியப்பட்டதாக அறிவித்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மிடில்டன் ராயல் ஃபவுண்டேஷன் சென்டர் ஃபார் எர்லி சைல்டுஹுட் செயல்பாடுகள் குறித்து தகவல்களை கேட்டறிந்து வந்தார். எவ்வாறாயினும், கென்சிங்டன் அரண்மனை செய்தித் தொடர்பாளர், இது அவர் உடனடியாக வேலைக்குத் திரும்புவதற்கான அறிகுறியாகக் கருதப்படக்கூடாது என்று அப்போது தெளிவுபடுத்தினார்.