NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / DOGE சேமிப்பில் 20% அமெரிக்க குடிமக்களுக்கு வழங்க டிரம்ப் பரிசீலனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    DOGE சேமிப்பில் 20% அமெரிக்க குடிமக்களுக்கு வழங்க டிரம்ப் பரிசீலனை
    இந்த யோசனை தனது நிர்வாகத்திற்குள் விவாதிக்கப்பட்டு வருகிறது என்று விவரித்தார் டிரம்ப்

    DOGE சேமிப்பில் 20% அமெரிக்க குடிமக்களுக்கு வழங்க டிரம்ப் பரிசீலனை

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 20, 2025
    09:11 am

    செய்தி முன்னோட்டம்

    எலான் மஸ்க் தலைமையிலான DOGE துறை அடையாளம் கண்டு எடுக்கப்படும் சேமிப்பு நடவடிக்கையில் 20 சதவீதத்தை அமெரிக்க குடிமக்களுக்குத் திருப்பித் தரும் திட்டத்தை தனது நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும், மேலும் 20% மத்திய அரசின் கடனைக் குறைப்பதற்காக ஒதுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    மியாமியில், சவுதி அரேபியாவின் இறையாண்மை செல்வ நிதியத்தால் நடத்தப்பட்ட உலகளாவிய நிதியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய டிரம்ப், இந்த யோசனை தனது நிர்வாகத்திற்குள் விவாதிக்கப்பட்டு வருகிறது என்று விவரித்தார்.

    இந்த யோசனை தொழிலதிபர் ஜேம்ஸ் ஃபிஷ்பேக்கிடமிருந்து உருவானது, அவர் செவ்வாயன்று X-இல் "DOGE ஈவுத்தொகையை" முன்மொழிந்து குறிப்பைப் பகிர்ந்து கொண்டார்.

    எலான் மஸ்க் அதை கவனித்து, "ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்படும்" என்று பதிலளித்தார்.

    யோசனை 

    தொழிலதிபர் ஃபிஷ்பேக் முன்மொழிந்த யோசனை

    ஜூலை 2026 இல் DOGE முடிவடைந்த பிறகு, வரி செலுத்தும் அனைத்து வீடுகளுக்கும் 5,000 அமெரிக்க டாலர் காசோலைகளை விநியோகிக்க அவர் முன்மொழிந்தார்.

    அதாவது, DOGE இன் சேமிப்பில் 20 சதவீதத்தை - அமெரிக்கா மதிப்பில் 400 பில்லியன் டாலர்களை - ஒதுக்க ஃபிஷ்பேக் யோசனை தெறிவித்தார்.

    எனினும், இந்த மதிப்பீடு DOGE 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் சேமிப்பை எட்டுவதை அடிப்படையாகக் கொண்டது. பில்லியன் கணக்கான டாலர்களை மிச்சப்படுத்தியதாக DOGE கூறியதை அடுத்து இந்த பேச்சு எழுந்தது.

    மஸ்க் தலைமையிலான DOGE துறை, அரசாங்க ஒப்பந்தங்களை குறைத்துள்ளது, கூட்டாட்சி வேலைகளை நீக்கியுள்ளது மற்றும் அரசாங்க சொத்துக்களை விற்று பெரும் செலவுக் குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது

    நடவடிக்கைகள்

    DOGE-யின் செலவு குறைப்பு நடவடிக்கைகள்

    DOGE கூட்டாட்சி பணியாளர்களை கடுமையாக மறுவடிவமைத்துள்ளது, பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மற்றும் முக்கிய திட்டங்களை மூடியுள்ளது.

    சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்திடமிருந்து (USAID) 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் குறைத்து, அதன் செயல்பாடுகளை திறம்பட அகற்றியதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இது கல்வித் துறையிலிருந்து 501 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், சமூகப் பாதுகாப்பு நிர்வாகத்திலிருந்து 232 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் குறைத்தது.

    இதனால் எவ்வளவு டாலர்கள் சேமிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    முன்னதாக, DOGE அறிவுறுத்தல்படி, இந்தியாவில் "வாக்காளர் வாக்குப்பதிவு" முயற்சிகளுக்காக நியமிக்கப்பட்ட 21 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ரத்து செய்வதாகவும் சமீபத்தில் தெரிவித்தார் டிரம்ப்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்
    எலான் மஸ்க்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    அமெரிக்கா

    அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 'சட்டவிரோத' இந்தியர்கள்: அடுத்து அவர்களின் நிலை என்ன? இந்தியர்கள்
    சர்வதேச நீதிமன்றத்திற்கு அமெரிக்காவில் தடை விதித்தார் டொனால்ட் டிரம்ப்  டொனால்ட் டிரம்ப்
    காதலர் தினத்தில் முன்னாள் காதலரை வெறுப்பேற்ற வேண்டுமா? அமெரிக்க மிருகக்காட்சி சாலையின் சூப்பர் ஆஃபர் காதலர் தினம்
    மேலும் 487 சட்டவிரோத இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல் இந்தியர்கள்

    டொனால்ட் டிரம்ப்

    அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு 8 மாத ஊதியத்துடன் விஆர்எஸ் திட்டத்தை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா
    67 உயிர்களை காவு வாங்கிய அமெரிக்கா விமான விபத்து: ஒபாமா, பைடன் தான் காரணம் என பழி சுமத்திய டிரம்ப் விமானம்
    'டாலரை மாற்றுங்கள், 100% கட்டணங்களை எதிர்கொள்ளுங்கள்': இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்  அமெரிக்கா
    சொன்னதைச் செய்தார் டொனால்ட் டிரம்ப்; கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு கூடுதல் வரி விதித்து உத்தரவு  சீனா

    எலான் மஸ்க்

    X-இல் இனி Bold, Italics ஸ்டைல் ஃபான்ட்ஸ் பயன்படுத்தமுடியாது எக்ஸ்
    உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்த மார்க் ஜூக்கர்பெர்க்; முதலிடத்தில் யார்? மார்க் ஸூக்கர்பெர்க்
    எக்ஸ் தளத்தில் 200 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற உலகின் முதல் நபர்; எலான் மஸ்க் சாதனை எக்ஸ்
    முழுவதும் தானியங்கி அம்சங்களுடன் கூடிய சைபர்கேப்; புதிய ரோபோ டாக்சியை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்  டெஸ்லா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025