உக்ரைன் போர் தொடங்கியதற்கு ஜெலென்ஸ்கியை காரணம்: டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவுடனான போருக்கு உக்ரைனே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா- உக்ரைன் போர் மூன்றாம் ஆண்டு நிறைவை நெருங்கி வருகிறது.
2022 ஆம் ஆண்டு போர் வெடிப்பதற்கு முன்பே உக்ரைன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியிருக்க வேண்டும் என்றும், இதனால் போரை தவிர்த்திருக்கலாம் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
தனது புளோரிடா இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, போர் ஒருபோதும் தொடங்கியிருக்கக் கூடாது என்றும், உக்ரைன் ஒரு ஒப்பந்தம் செய்திருக்கலாம் என்றும் டிரம்ப் கூறினார்.
உயர்மட்ட குழு
போரை முடிவுக்கு கொண்டு வர உயர்மட்டக்குழு அமைத்தது அமெரிக்கா
ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்காவும், ரஷ்யாவும் உயர்மட்டக் கூட்டத்தை நடத்திய பின்னர் டிரம்ப் இந்த கருத்தை கூறினார்.
இந்தக் கூட்டத்தின் இறுதியில், உக்ரைனில் அமைதியைக் கொண்டுவருவதற்காக பாடுபடும் உயர்மட்டக் குழுவை உருவாக்க இரு நாடும் முடிவு செய்தன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற இந்த உயர்மட்ட கூட்டத்தில் இருந்து ஏனோ உக்ரைன் தவிர்க்கப்பட்டது.
பேச்சுவார்த்தையில் பங்கேற்காததால், போரின் முடிவை நாடு ஏற்றுக்கொள்ளாது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.
பதில்
உக்ரைனின் குற்றச்சாட்டுக்கு ட்ரம்பின் பதில்
பேச்சுவார்த்தையில் சேர்க்கப்படாதது குறித்து உக்ரைனின் ஆட்சேபனையை நிராகரித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், "இன்று நான் கேள்விப்பட்டேன். சரி, நீங்கள் அழைக்கப்படவில்லை. நீங்கள் மூன்று ஆண்டுகளாக அங்கு இருக்கிறீர்கள். நீங்கள் அதை மூன்று ஆண்டுகளுக்குள் முடித்திருக்க வேண்டும்... நீங்கள் அதை ஒருபோதும் தொடங்கியிருக்கக்கூடாது. நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்திருக்கலாம்." என்றார்.
இந்த மாத இறுதியில் ரஷ்ய பிரதமர் புடினை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பின் போது புதினை சந்திப்பது குறித்து கேட்டபோது, "அநேகமாக," என்று அவர் கூறினார்.