Page Loader
டிரினிடாட் & டொபாகோ பிரதமருக்கு, பிரதமர் மோடி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?
இந்தியாவின் ஆழ்ந்த ஆன்மிக மரபுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பரிசுகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி

டிரினிடாட் & டொபாகோ பிரதமருக்கு, பிரதமர் மோடி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 04, 2025
01:05 pm

செய்தி முன்னோட்டம்

அரசு முறை பயணமாக டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு இந்தியாவின் ஆழ்ந்த ஆன்மிக மரபுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பரிசுகளை வழங்கினார். மோடி, பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் புனித நீரையும், அயோத்தியாவில் உள்ள ராமர் கோயிலின் மாதிரி நினைவுச் சின்னத்தையும் பரிசாக அளித்துள்ளார். இது, இந்தியாவுக்கும் டிரினிடாட் & டொபாகோவிற்கும் இடையிலான ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மிக பிணைப்பை வெளிக்கொணருகிறது. இந்த நிகழ்வுகள் பற்றிய எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி,"பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் நடத்திய விருந்தில், ராமர் கோயிலின் மாதிரி நினைவுச் சின்னம் மற்றும் கும்பமேளாவின் புனிதநீரை வழங்கினேன். இவை, இரண்டு நாடுகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படும் ஆன்மீக உறவுகளுக்கு சின்னமாகும்." எனக்கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பிஹாரின் மகள்

"பிரதமர் கமலா பெர்சாத் பிஹாரின் மகள்"

இந்திய வேர்களைக் கொண்டுள்ள பிரதமர் கமலா பெர்சாத், இந்திய வம்சாவளியினராக இருப்பதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, அவரை "பிஹாரின் மகள்" என அன்போடு அழைத்தார். மேலும், அவரின் மூதாதையர்கள் பிஹாரிலிருந்து புலம்பெயர்ந்தவர்களாக இருந்தது குறித்து நினைவுகூரினார்.

பயணம்

பிரதமரின் சிறப்புமிக்க பயணம் 

மோடியின் இப்பயணம், 1999 ஆம் ஆண்டிற்குப் பிறகு டிரினிடாட் & டொபாகோவுக்கு வருகை தரும் முதல் இந்திய பிரதமர் எனும் சிறப்பை பெற்றுள்ளது. போர்ட் ஆஃப் ஸ்பெயின் பியார்கோ சர்வதேச விமான நிலையத்தில் அவரை, பிரதமர் கமலா பெர்சாத் மற்றும் அமைச்சர்கள் உள்பட அரசு பிரதிநிதிகள் வரவேற்றனர். இந்த நிகழ்வுகள், இந்தியா-கரிபிய நாடுகளுக்கிடையிலான வரலாற்றுச் சங்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாகவும், இந்திய பண்பாட்டு தாக்கத்தை உலகளவில் வலியுறுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.