LOADING...
உலக ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா ஒத்துழைப்பு முக்கியம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
உலக ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா ஒத்துழைப்பு முக்கியம் என பிரதமர் மோடி வலியுறுத்தல்

உலக ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா ஒத்துழைப்பு முக்கியம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2025
07:53 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகப் பொருளாதார அமைப்பில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வர இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்படுவது முக்கியம் என்று வலியுறுத்தினார். தி யோமியோரி ஷிம்புன்னிற்கு அளித்த பேட்டியில், இரு அண்டை நாடுகளாகவும், உலகின் மிகப்பெரிய இரு நாடுகளாகவும் உள்ள இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலையான மற்றும் சுமூகமான இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலக அமைதி மற்றும் செழிப்பில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். "அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பானில் இருந்து நான் தியான்ஜின் நகருக்குப் பயணம் செய்ய உள்ளேன்." என்று பிரதமர் மோடி கூறினார்.

இருதரப்பு உறவு

இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம்

கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான தனது சந்திப்புக்குப் பிறகு இருதரப்பு உறவுகளில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பரஸ்பர மரியாதை, பரஸ்பர நலன் மற்றும் பரஸ்பர உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை ஒரு மூலோபாய மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் மேம்படுத்த இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் உறுதிப்படுத்தினார். ஜப்பானின் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பற்றிய அரசின் பார்வை குறித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் சாகர் பார்வை (Vision MAHASAGAR) மற்றும் இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் முன்முயற்சி ஆகியவற்றோடு ஜப்பானின் இந்தோ-பசிபிக் பார்வைக்கு வலுவான ஒத்துழைப்பு உள்ளது என்று குறிப்பிட்டார்.