
ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி: முக்கிய தொழிலதிபர்களுடன் சந்திப்பு
செய்தி முன்னோட்டம்
மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் விருந்தினராக மே 22 முதல் 24 வரை பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
மேலும், நாட்டின் ஆற்றல்மிக்க, பன்முகத்தன்மை கொண்ட இந்திய புலம்பெயர்ந்தோரைக் கொண்டாடும் சமூக நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார்.
"பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துவார். மேலும், அவர் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்து,அங்கிருக்கும் இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றுவார். பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இரவு விருந்தளிக்க உள்ளார்." என்று பிரதமர் மோடியின் திட்டங்கள் குறித்து விவரித்த வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
details
பெரும் நிறுவன தலைவர்களை சந்தித்தார் பிரதமர் மோடி
"அதிகாரப்பூர்வமாக பிரதமர் மோடிக்கு விருந்தளிப்பதில் பெருமை அடைகிறேன்" என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
தற்போது, பிரதமர் மோடி பெரும் ஆஸ்திரேலிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட பசுமை ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான போர்ட்ஸ்க்யு பியூச்சர் இண்டஸ்ட்ரீஸின் செயல் தலைவரை பிரதமர் மோடி இன்று சந்தித்தார்.
ஜான் ஆண்ட்ரூ ஹென்றி பாரஸ்ட் என்ற ஆஸ்திரேலிய தொழிலதிபரையும் பிரதமர் சந்தித்தார். ஜான் ஆண்ட்ரூ என்பவர் 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் பணக்காரராக இருந்தவர் ஆவார்.
சிட்னியில் வைத்து ஆஸ்திரேலிய சூப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் ஷ்ரோடரையும் பிரதமர் சந்தித்தார்.