ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்டல் விருதை பெறும் 3வது வெளிநாட்டு தலைவர் மோடி
நேற்று ரஷ்யாவின் கிரெம்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ ஹாலில் நடந்த சிறப்பு விழாவில், இந்திய பிரதமர் மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான -- ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலரை அதிபர் புதின் வழங்கினார். இந்த விருது மோடிக்கு 2019இல் அறிவிக்கப்பட்டது. டெல்லி மற்றும் மாஸ்கோ இடையே சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை வளர்ப்பதற்கும், மோடி செய்த பங்களிப்புக்காக அவருக்கு ரஷ்யாவின் மிகவும் மதிப்புமிக்க கௌரவம் வழங்கப்பட்டது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த விருதினை மோடிக்கு வழங்குவதாக அறிவித்தது.
2019இல் அறிவிக்கப்பட்ட விருது
இந்தாண்டு பிரதமருக்கு புடினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது
ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ மற்றும் விழா மண்டபத்தின் சிறப்பு
ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல், ரஷ்யாவின் உயரிய சிவிலியன் கௌரவமாகும். இது 1698ஆம் ஆண்டில் ஜார் பீட்டர் தி கிரேட் அவர்களால் இயேசுவின் முதல் அப்போஸ்தலர் மற்றும் ரஷ்யாவின் புரவலர் புனித ஆண்ட்ரூவின் நினைவாக நிறுவப்பட்டது. இது மிகச் சிறந்த சிவிலியன் அல்லது இராணுவத் தகுதிக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் நிகழ்வு, செயின்ட் ஆண்ட்ரூவின் பிரமாண்ட மண்டபத்தில் நடந்தது. இந்த இடம் பல நூற்றாண்டுகளாக ரஷ்யாவில் இது போன்ற மதிப்பு மிக்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படும் இடமாகும். இந்த வரலாற்றுச் சுவர்களுக்குள் வேறொரு நாட்டின் தலைவருக்கு விருது வழங்குவது உண்மையிலேயே ஒரு பெரிய கவுரவம்.
இந்த உயரிய விருதினை பெற்றவர்கள் பட்டியல்
ஹெய்டர் அலியேவ்- அக்டோபர் 1993 முதல் அக்டோபர் 2003 வரை அஜர்பைஜானின் மூன்றாவது ஜனாதிபதியாகவும் இருந்தார். ரசூல் கம்சடோவ்- அவர் பிரபலமான ரஷ்ய கவிஞர் ஆவார். மிகைல் கோர்பச்சேவ்- அவர் ஒரு சோவியத் மற்றும் ரஷ்ய அரசியல்வாதி, சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவராக பணியாற்றினார். டேனில் கிரானின்- சோவியத் மற்றும் ரஷ்ய எழுத்தாளர். மிகைல் கலாஷ்னிகோவ்- சோவியத் மற்றும் ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல், கண்டுபிடிப்பாளர், இராணுவ பொறியாளர், எழுத்தாளர் மற்றும் சிறிய ஆயுத வடிவமைப்பாளர். AK-47 துப்பாக்கி மற்றும் அதன் மேம்பாடுகளான AKM மற்றும் AK-74, அத்துடன் RPK லைட் மெஷின் துப்பாக்கி மற்றும் PK இயந்திர துப்பாக்கி ஆகியவற்றை உருவாக்குவதில் அவர் மிகவும் பிரபலமானவர். கிரில்- ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் பிஷப்
இந்த விருதை வென்ற வெளிநாட்டு தலைவர்கள்
நர்சுல்தான் நசர்பயேவ்- அவர் கஜகஸ்தானின் முதல் ஜனாதிபதி ஜி ஜின்பிங்- 2012 முதல் சீனாவின் ஜனாதிபதியாகவும் இருந்து வருகிறார் பிரதமர் மோடி- மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்று, இந்த வரிசையில், இந்த விருதை பெற்ற 3 வது வெளிநாட்டு தலைவர் மோடி ஆவார். பிரதமர் மோடி இந்த விருதினை பெற்றுக்கொண்ட பின்னர், இந்த விருது எனக்கானது அல்ல, இந்தியாவிலுள்ள 140 கோடி மக்களுக்கானது என கூறி, இந்த விருதினை வழங்கிய ரஷ்யா அதிபர் புட்டினுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.