
அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வைரக்கல்லை பரிசளித்தார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, தனது இரண்டாவது நாள் பயணத்தின் முடிவில் வாஷிங்டனிற்கு சென்றடைந்தார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உணவருந்த இருக்கிறார்.
பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் வரவேற்றனர்.
'தி டென் பிரின்சிபல் ஆப் உபநிடதங்கள்' என்ற புத்தகத்தையும், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு தலைசிறந்த கைவினைஞர் உருவாக்கிய சந்தனப் பெட்டியையும் பிரதமர் மோடி ஜோ பைடனுக்கு பரிசாக வழங்கினார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு வெள்ளித் தொழிலாளியின் குடும்பத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகப் பெருமானின் சிலை மற்றும் ஒரு எண்ணெய் விளக்கு ஆகியவை அந்த பெட்டியில் உள்ளது.
சட்ஜஸ்
வெள்ளை மாளிகையில் பிரதமருக்கு எந்த மாதிரியான விருந்து அளிக்கப்படும்?
மேலும், ஜில் பைடனுக்கு 7.5 காரட் வைரக்கல்லையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார்.
மயில்கள் மற்றும் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை மாளிகையில் இன்று பிரதமர் மோடிக்கு சைவ விருந்து அளிக்கப்பட உள்ளது.
பிரதமர் மோடிக்கு வறுக்கப்பட்ட கார்ன் கெர்னல் சாலட் மற்றும் டேன்ஜி அவகேடோ சாஸ் அடங்கிய உணவு முதலில் பரிமாறப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதுபோக, போர்டோபெல்லோ காளான்கள் மற்றும் கிரீமி குங்குமப்பூ கலந்த ரிசொட்டோ பிரதான உணவாக வழங்கப்படும்.
விருந்தின் முடிவில் ரோஸ் மற்றும் ஏலக்காய் கலந்த ஸ்ட்ராபெரி ஷார்ட்கேக் இனிப்புக்காக பரிமாறப்படும் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த விருந்துக்கு பிறகு, பிரதமர் மோடி தொழில்துறை தலைவர்கள் மற்றும் CEOகளை சந்திக்க இருக்கிறார்.