
ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்
செய்தி முன்னோட்டம்
ரகசிய ஆவணங்கள் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று(ஜூன் 13) விடுவிக்கப்பட்டார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ரகசிய ஆவணங்களை கையாண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ட்ரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகு இரகசிய அரசாங்க ஆவணங்களை தனது புளோரிடா வீட்டில் வைத்திருந்ததாக ஃபெடரல் கிராண்ட் ஜூரி அவர் மீது குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக அவர் நேற்று மியாமி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப்புக்கு பயண நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் ஜாமீன் வழங்கினர்.
ஆனால், அவரது இணை பிரதிவாதியும் ராணுவ உதவியாளருமான வால்ட் நௌடாவுடன் அவர் இந்த வழக்கு குறித்து விவாதிக்க கூடாது என்ற உத்தரவு பிற்பக்கப்பட்டுள்ளது.
வடிவ
44 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
மேலும், டொனால்டு டிரம் எந்த சாட்சியுடனும் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இரகசிய அரசாங்க ஆவணங்களை கையாடல் செய்ததற்காகவும், பொய்யான அறிக்கைகளை அளித்தற்காகவும், இதையெல்லாம் மறைக்க சதி செய்தததற்காகவும் டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்காக 44 பக்க குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த குற்றவியல் குற்றச்சாட்டுகளை டிரம்ப் முற்றிலுமாக நேற்று மறுத்துவிட்டார்.
இதனையடுத்து, நேற்று நடந்த 45 நிமிட நீதிமன்ற விசாரணைக்கு பிறகு டிரம்ப் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், இதே வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள நௌடாவுடன் டொனால்டு டிரம்ப் இந்த வழக்கு குறித்து விவாதிக்க கூடாது என்ற உத்தரவு பிற்பக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபர் டிரம்ப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.