Page Loader
பிரதமர் நரேந்திர மோடிக்கு டொனால்ட் டிரம்ப் அளித்த சிறப்பு பரிசு!
பிரதமர் மோடிக்கு, டிரம்ப் ஒரு சிறப்பு நினைவு பரிசை வழங்கினார்

பிரதமர் நரேந்திர மோடிக்கு டொனால்ட் டிரம்ப் அளித்த சிறப்பு பரிசு!

எழுதியவர் Venkatalakshmi V
Feb 14, 2025
09:44 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று மாலை சந்தித்து கொண்டனர். அப்போது மோடிக்கு டிரம்ப் ஒரு சிறப்பு நினைவு பரிசை வழங்கினார். டிரம்ப் தன் கைப்பட கையெழுத்திட்ட "திரு. பிரதமர், நீங்கள் சிறந்தவர்(Mr. Prime Minister, you're great)" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட 'எங்கள் பயணம் ஒன்றாக(Our Journey Together)' என்ற காபி டேபிள் புத்தகம் வழங்கினார். 320 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் 'ஹவுடி மோடி' மற்றும் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்வுகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக தங்கள் அன்பை வெளிப்படுத்தியதன் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

நட்பு

இரு நாட்டு தலைவர்களும் பொதுவெளியில் தங்கள் நட்பை வெளிப்படுத்தினர்

கடந்த 2019 ஆம் ஆண்டு ஹூஸ்டனில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் 'ஹவுடி மோடி' பேரணி நடைபெற்றது. இதில் 50,000 க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். இந்த பிரமாண்ட பேரணியில் பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் இருவரும் உரையாற்றினர். அதேபோல ஐந்து மாதங்கள் கழித்து, பிப்ரவரி 2020 இல், அகமதாபாத்தில் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்வு நடைபெற்றது, இது இந்தியா-அமெரிக்க உறவுகளின் வலிமையை அடிக்கோடிட்டு காட்டியது. இந்தப் புத்தகம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இந்தியாவின் வலைத்தளங்களில் ₹ 6,000 முதல் ₹ 6,873 வரையிலும், டிரம்ப் ஸ்டோரில் $ 100 க்கும் கிடைக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post