Loading...
மெக்கா ஒப்பந்தம் அமலுக்கு வந்தது: சவுதி அரேபியாவிற்கு ராணுவப் படைகளை அனுப்பும் பாகிஸ்தான், துருக்கி
சவுதி அரேபியாவிற்கு ராணுவப் படைகளை அனுப்பும் பாகிஸ்தான், துருக்கி

மெக்கா ஒப்பந்தம் அமலுக்கு வந்தது: சவுதி அரேபியாவிற்கு ராணுவப் படைகளை அனுப்பும் பாகிஸ்தான், துருக்கி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 06, 2026
07:58 am

செய்தி முன்னோட்டம்

சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான 'மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்' திங்கள்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இதன் கீழ் சவுதி அரேபியாவிற்கு படைகளையும் ராணுவ போர்த் தளவாடங்களையும் உடனடியாக அனுப்ப பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஒப்புக்கொண்டுள்ளன. ரியாத் நகரில் அக்டோபர் 5 அன்று நடைபெற்ற 'மெக்கா பாதுகாப்பு கூட்டமைப்பின்' அரசியல் மற்றும் பாதுகாப்புக்குழு அவசரக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அவசரக் கூட்டம்

ரியாத் அவசரக் கூட்டமும் முடிவுகளும்

மூன்று நாடுகளின் தேசியச் சட்டங்கள் மற்றும் பரஸ்பர உடன்படிக்கைகளின்படி, சவுதி அரேபியாவில் ராணுவப் படைகளை விரைவாகப் பணியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்படும்.

புனிதத் தலங்களான மெக்கா, மதினா மற்றும் சவுதியின் பொருளாதார, உள்கட்டமைப்பு மையங்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இக்கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7 அன்று கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், மற்ற இரு நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.

பங்கேற்பு

முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு & புதிய பொதுச்செயலாளர்

இந்த உயர்மட்டக் கூட்டத்தில் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபைடன், பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், சவுதி பாதுகாப்புத் துறை அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் நௌமன் மஹ்மூத், மெக்கா பாதுகாப்பு கூட்டமைப்பின் முதல் பொதுச்செயலாளராக 3 ஆண்டுகள் பதவி வகிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் எரிசக்தி மையங்களைக் குறிவைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இந்த ராணுவக் கூட்டமைப்பு அமலுக்கு வந்திருப்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT