விமான விபத்தில் கொல்லப்பட்ட பிரபல அரசியல்வாதிகள் ஒரு பார்வை
ஈரான் நாட்டின் மலைப்பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார். இன்று ஒரு அறிக்கையில், ஈரானிய அரசாங்கம் ஜனாதிபதி ரைசியை இழந்தாலும் "இடையூறு இல்லாமல்" நடவடிக்கைகள் தொடரும் என்று உறுதியளித்தது. "அயத்துல்லா ரைசியின் அயராத மனப்பான்மையுடன் சேவையின் பாதை தொடரும் என்று விசுவாசமுள்ள தேசத்திற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்," என்று அறிக்கை தெரிவித்தது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி முதல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரமோன் மகசேசே வரை விமான விபத்தில் இறந்த போன சில பிரபல அரசியல்வாதிகள் பற்றி ஒரு பார்வை:
விமான விபத்தில் கொல்லப்பட்ட பிரபல அரசியல்வாதிகள்
அர்விட் லிண்ட்மேன், ஸ்வீடன் பிரதமர் (1936): ஸ்வீடிஷ் ரியர் அட்மிரல் மற்றும் ஸ்வீடனின் இரண்டு முறை பிரதமராக இருந்த சாலமன் அர்விட் அகேட்ஸ் லிண்ட்மேன், செல்வாக்கு மிக்க பழமைவாத அரசியல்வாதி ஆவார். டிசம்பர் 9, 1936இல், லிண்ட்மேன் அவர் பயணித்த டக்ளஸ் DC-2, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள க்ராய்டன் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள வீடுகளின் மீது மோதிய விபத்தில் இறந்தார். ரமோன் மகசேசே, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி (1957): ரமோன் மகசேசே, ஊழலுக்கு எதிரான வலுவான நிலைப்பாடு மற்றும் ஜனரஞ்சக முறையீட்டிற்காக அறியப்பட்டவர். மார்ச் 17, 1957 அன்று, அவரது விமானம் செபு நகரில் உள்ள மானுங்கால் மலையில் மோதியது. 25 பயணிகளில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.
விமான விபத்தில் கொல்லப்பட்ட பிரபல அரசியல்வாதிகள்
அப்துல் சலாம் ஆரிப், ஈராக் ஜனாதிபதி(1966): ஈராக்கின் இரண்டாவது ஜனாதிபதியான அப்துல் சலாம் ஆரிப், 1958ஆம் ஆண்டு மன்னராட்சியை அகற்றிய புரட்சியில் முக்கிய பங்கு வகித்தார். ஏப்ரல் 13, 1966 அன்று, ஆரிஃப் தனது ஈராக் விமானப்படை விமானம், டி ஹவில்லாண்ட் DH.104 டோவ், பாஸ்ரா அருகே விபத்துக்குள்ளானதில் இறந்தார். சஞ்சய் காந்தி, இந்திய அரசியல்வாதி மற்றும் காங்கிரஸ் தலைவர்(1980): முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி, ஜூன் 23, 1980 அன்று இறந்தார். டெல்லி சப்தர்ஜங் விமான நிலையத்தில் விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்த சஞ்சயின் உயிர் பிரிந்தது.ரஷித் கராமி, லெபனான் பிரதமர்(1987): லெபனானின் பிரதமரான ரஷித் கராமி, பெய்ரூட் செல்லும் வழியில் ஹெலிகாப்டரில் வெடிகுண்டு வெடித்து கொல்லப்பட்டார்.
விமான விபத்தில் கொல்லப்பட்ட பிரபல அரசியல்வாதிகள்
முஹம்மது ஜியா-உல்-ஹக், பாகிஸ்தான் ஜனாதிபதி (1988): பாகிஸ்தானின் ஆறாவது ஜனாதிபதியான ஜெனரல் முஹம்மது ஜியா-உல்-ஹக் ஆகஸ்ட் 17, 1988இல் இறந்தார். அவரது C-130 ஹெர்குலஸ் விமானம் பஹவல்பூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. மாதவராவ் சிந்தியா, இந்திய அரசியல்வாதி மற்றும் காங்கிரஸ் தலைவர்(2001):மாதவ்ராவ் சிந்தியா செப்டம்பர் 30, 2001 அன்று விமான விபத்தில் இறந்தார். உத்திரபிரதேசத்தின் மைன்புரிக்கு அருகே அவரது தனிப்பட்ட பீச்கிராஃப்ட் கிங் ஏர் சி90 நடுவானில் தீப்பிடித்ததில் விபத்து ஏற்பட்டது. Y.S.ராஜசேகர ரெட்டி, இந்திய அரசியல்வாதி மற்றும் ஆந்திர முதல்வர்(2009): செப்டம்பர் 2, 2009 அன்று, நல்லமலா வனப்பகுதியில் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் காணாமல் போனது. ரெட்டி உட்பட 5 பேருடன் விபத்துக்குள்ளானது, பின்னர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.