
சனிக்கிழமை போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு; திறந்த சவப்பெட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள போப்பின் உடல்
செய்தி முன்னோட்டம்
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு (GMT) நடைபெறும் என்று வாடிகன் இன்று அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை அவர் இறந்த பின்னர் அவர் உடல் சவப்பெட்டியில் வைத்திருக்கும் முதல் படங்களை தற்போது வாடிகன் வெளியிட்டுள்ளது.
வாடிகன் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் இறுதிச் சடங்கு நடைபெறும்.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட புகைப்படங்களில், போப் பிரான்சிஸ் உடல் அவரது 12 ஆண்டுகால போப்பாண்டவராக இருந்த காலத்தில் வாழ்ந்த சாண்டா மார்ட்டா இல்லத்தின் தேவாலயத்தில் தனது உடைகளை அணிந்து ஒரு மர சவப்பெட்டியில் கிடத்தியிருப்பதைக் காட்டியது.
சவப்பெட்டியின் இருபுறமும் சுவிஸ் காவலர்கள் நிற்பதையும் அந்த புகைப்படங்களில் காண முடிந்தது.
அஞ்சலி
பொதுமக்கள் அஞ்சலி மற்றும் விவரங்கள்
புதன்கிழமை காலை செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் போப் பிரான்சிஸை பொதுமக்கள் பார்வையிட கார்டினல்கள் முடிவு செய்துள்ளதாக ஏபி தெரிவித்துள்ளது.
இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்த விவாதங்களுக்காக இன்று காலை 9 மணிக்கு ஒன்றுகூடுமாறு ரோமில் உள்ள அனைத்து கார்டினல்களுக்கும் வாடிகன் அழைப்பு விடுத்துள்ளது.
பாரம்பரியத்தை மீறி, போப் பிரான்சிஸ், புனித பீட்டர் பசிலிக்காவிற்கு பதிலாக, ரோமின் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுவார். இது அவருடைய விருப்பம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் உலகத் தலைவர்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒருவர். அர்ஜென்டினாவின் அதிபர் ஜேவியர் மிலேயும் தனது நாட்டைச் சேர்ந்த போப்பை கௌரவிக்க வருவார்.
இறுதி அடக்கம்
இறுதி அடக்கம் குறித்து முன்னரே தெரிவித்த போப் பிரான்சிஸ்
"என் வாழ்நாள் முழுவதும், நான் எப்போதும் என்னை நமது ஆண்டவரின் தாயான ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளிடம் ஒப்படைத்துள்ளேன். இந்தக் காரணத்திற்காக, எனது மரண உடல், உயிர்த்தெழுதல் நாளுக்காகக் காத்திருக்கும் புனித மேரி மேஜரின் பாப்பல் பசிலிக்காவில் ஓய்வெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் முன்னரே தெரிவித்துள்ளார்.
மேலும், "கல்லறை தரையில் இருக்க வேண்டும்; எளிமையானது, குறிப்பிட்ட அலங்காரங்கள் இல்லாமல், கல்வெட்டு மட்டுமே தாங்கியதாக இருக்க வேண்டும்" என்று கூறி, எளிமையான அடக்கத்தையும் விரும்பினார்.
"அடக்கம் செய்வதற்கான செலவு ஒரு நன்கொடையாளரால் வழங்கப்படும் தொகையால் ஈடுசெய்யப்படும், அதை நான் செயிண்ட் மேரி மேஜரின் பாப்பல் பசிலிக்காவிற்கு மாற்ற ஏற்பாடு செய்துள்ளேன்" என்று போப் பிரான்சிஸ் மேலும் கூறினார்.