NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உலக நாடுகளுக்கிடையே ஏற்படவுள்ள 'தொற்றுநோய் உடன்படிக்கை'
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலக நாடுகளுக்கிடையே ஏற்படவுள்ள 'தொற்றுநோய் உடன்படிக்கை'
    மே-27 அன்று உலக சுகாதாரத் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது

    உலக நாடுகளுக்கிடையே ஏற்படவுள்ள 'தொற்றுநோய் உடன்படிக்கை'

    எழுதியவர் Venkatalakshmi V
    May 24, 2024
    04:57 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆண்டு தோறும் உலக சுகாதாரத் தலைவர்கள் ஜெனிவாவில் வருடாந்திர உலக சுகாதார பேரவைக்கு கூடுவார்கள்.

    அப்போது எதிர்வரும் சுகாதார சீர்கேடுகள் பற்றியும், அதற்கு மேற்கொள்ளவேண்டிய சுகாதார நடவடிக்கைகள் பற்றியும் விவாதங்கள் நடைபெறும்.

    இந்தாண்டு மே-27 அன்று இந்த உலக சுகாதாரத் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

    எதிர்வரும் இக்கூட்டத்தின் முக்கிய தீர்மானம், 'தொற்றுநோய் உடன்படிக்கை' ஆகும்.

    இந்த உடன்படிக்கை தொற்றுநோய்களை சமாளிக்க தயாராவதிலும், தடுப்பதிலும் மற்றும் எதிர்வினை ஆற்றுவதிலும் சர்வதேச ஒத்துழைப்பை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    அது என்ன 'தொற்றுநோய் உடன்படிக்கை'? இந்த உடன்படிக்கையினால் எதிர்கால COVID-19 போன்ற நோய்களைச் சமாளிக்க உலக நாடுகளைத் தயாராகுமா?

    இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு முயன்று வருகின்றனர்.

    தொற்றுநோய் உடன்படிக்கை 

    தொற்றுநோய் உடன்படிக்கை பற்றிய யோசனை எவ்வாறு தோன்றியது?

    2005இல் புதுப்பிக்கப்பட்ட சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள், எல்லை தாண்டிய பாதிப்புகளுடன் கூடிய பொது சுகாதார நிகழ்வுகள் தொடர்பாக நாடுகளின் கடமைகளை வலியுறுத்துகிறது.

    2002-2003 SARS தொற்று பரவிய போது ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த விதிமுறைகள், எபோலா போன்ற பிராந்திய தொற்றுநோய்களுக்கு இன்னும் பொருத்தமானதாகக் கருதப்பட்டாலும், அவை உலகளாவிய தொற்றுநோயை நிர்வகிக்க போதுமானதாக இல்லை என்று கருதப்படுகிறது.

    இதன் விளைவாக, இந்த விதிமுறைகள் COVID-19 தொற்றுநோய் பரவலுக்கு பின்னர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதி தான் இந்த தொற்றுநோய் உடன்படிக்கை.

    இந்த உடன்படிக்கையின் பின்னணியில் உள்ள யோசனை என்னவென்றால், எதிர்கால தொற்றுநோய்களுக்கு உலகம் சிறப்பாக தயாராகி பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்து, தொற்றுகளை தடுக்க தேவையான கருவிகள், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளுக்கு உத்தரவாதம் தருகிறது

    உலக நாடுகளின் செயல்பாடு

    தொற்றுநோய் ஒப்பந்தம் உலக நாடுகளின் செயல்பாட்டை எவ்வாறு மாற்றும்?

    தொற்றுநோய் ஒப்பந்தமானது, இளைஞர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சமூக உறுப்பினர்கள், நோயாளிகள் மற்றும் சமூகத்தில் உள்ள அனைத்து தனிநபர்களுக்கும் பாதுகாப்பை உறுதிசெய்து, மருத்துவம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதாகும்.

    இந்த ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டால், உலகளாவிய தொற்றுநோய் பரவுதல் பற்றி நாடுகளிடையே அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.

    அறிக்கையிடல் மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறைகள் போன்ற இணக்கத்தை ஊக்குவிக்கும் வழிமுறைகளையும் இது நிறுவும்.

    முக்கியமாக, இந்த ஒப்பந்தம் உள்நாட்டு பொது சுகாதாரக் கொள்கைகளின் கட்டுப்பாட்டை WHO அல்லது வேறு எந்த சர்வதேச அமைப்புக்கும் மாற்றாது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொற்று நோய்
    தொற்று
    உலக சுகாதார நிறுவனம்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    தொற்று நோய்

    இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; 20 பேர் உயிரிழந்தனர் கொரோனா
    ஹாங்காங் மனிதனுக்கு குரங்கு தாக்கி அரிதான பி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது; அப்படியென்றால் என்ன? வைரஸ்

    தொற்று

    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? உடல் நலம்
    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று கொரோனா
    உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு வைரஸ்

    உலக சுகாதார நிறுவனம்

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    மார்பர்க் வைரஸ் என்றால் என்ன: மார்பர்க் பெரும் பரவலை அறிவித்த WHO உலக செய்திகள்
    உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள் மருத்துவ ஆராய்ச்சி
    தேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025