Page Loader
பாகிஸ்தானின் 29வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் காசி ஃபேஸ் ஈஷா 
அவரது பதவிக்காலம் 13 மாதங்கள் நீடித்து, அக்டோபர் 25, 2024 அன்று முடிவடையும்.

பாகிஸ்தானின் 29வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் காசி ஃபேஸ் ஈஷா 

எழுதியவர் Sindhuja SM
Sep 17, 2023
07:56 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் 29வது தலைமை நீதிபதியாக நீதிபதி காசி ஃபேஸ் ஈஷா இன்று(செப் 17) பதவியேற்றார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்று இருக்கும் அவரது பதவிக்காலம் 13 மாதங்கள் நீடித்து, அக்டோபர் 25, 2024 அன்று முடிவடையும். 63 வயதான நீதிபதி ஈஷா, இஸ்லாமாபாத்தில் உள்ள அய்வான்-இ-சத்ரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்று கொண்டார். இடைக்கால பிரதமர் அன்வாருல் ஹக் கக்கர், ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அமைச்சர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி ஈசா நியமனம் குறித்த அறிவிப்பு வாசிக்கப்பட்டபோது அவரது மனைவி சரீனா ஈஷா அவருக்கு அருகில் இருந்தார்.

டியூ

இம்ரான் கானுக்கும் புதிய தலைமை நீதிபதிக்கும் முன்விரோதம் உள்ளதா?

பொதுவாக, ஒருவர் பதவியேற்கும் போது, அவரது நெருங்கிய உறவினர்கள் கூட்டத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். ஆனால், ஒருவர் பதவி பிரமாணம் செய்யும் போது அவரது குடும்ப உறுப்பினர் அவர் அருகில் நிற்பது மிக அரிதான விஷயமாகும். நீதிபதி ஈசா மற்றும் அவரது மனைவி சரீனாவின் மீது 2019இல் வரி வழக்கு ஒன்று போடப்பட்டது. அப்போது, சரீனாவை குறித்து மிக பரபரப்பாக பேசப்பட்டது. அந்த சமயத்தில் அவர் நீதிமன்றத்திற்கு வந்தபோது, ஒரு ஊன்று கோலுடன் வந்தது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. பின்னர், அவர்கள் இருவரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பின்னடைவுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். அப்போதைய அரசாங்கத்திற்கு சாதகமாக இந்த நீதிபதி இல்லை என்பதால் அவரை இம்ரான் கான் அரசு குறிவைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.