Page Loader
மேற்கு கரையில் மசூதி மேல் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
அல்-அன்சார் மசூதியை ஆயுத குழுவினர், இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் கட்டளை மையமாக பயன்படுத்தி வந்ததாக இஸ்ரேல் ராணுவ படையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்கு கரையில் மசூதி மேல் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

எழுதியவர் Srinath r
Oct 22, 2023
09:04 am

செய்தி முன்னோட்டம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில், ஜெனின் அகதிகள் முகாமில் உள்ள அல்-அன்சார் மசூதி மேல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மூவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், ஜெனினில் உள்ள ரெட் கிரசென்ட்டின் இயக்குநர் மஹ்மூத் அல்-சாதி தெரிவித்தார். ராய்ட்டர்ஸ் செய்தி முகமை, இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், பாலஸ்தீன மருத்துவர்கள் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், அல்-அன்சார் மசூதியை ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் கூடாரமாக பயன்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், மக்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும், மசூதியை ஒரு கட்டளை மையமாக பயன்படுத்தப்பட்டு வந்ததை உளவுத்துறை கண்டறிந்ததாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படை