அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் தாக்குதல் போர் குற்றத்திற்கு சமமானது
காசாவில் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, போர் குற்றத்திற்கு சமமானது என ஐநா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல்- ஹமாஸ் இடையே தொடங்கிய போர் 25 நாட்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அளிக்கும் நோக்கத்துடன் களமிறங்கியுள்ள இஸ்ரேல், காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று, காசாவில் ஜபாலியா அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி, ஹமாஸ் தளபதி இப்ராஹிம் பியாரியை கொன்றதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தாக்குதலை ஐநா போர் குற்றத்திற்கு சமமானது என கூறியுள்ளது.