Loading...
இஸ்ரேலில் புதிய அரசு அமைக்கும் பணி தீவிரம்: எதிர்கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றி என அறிவித்த காடி ஐசென்காட்
முக்கியப் பதவிகளுக்கான வேட்பாளர்களை காடி ஐசென்காட் அறிவித்துள்ளார்

இஸ்ரேலில் புதிய அரசு அமைக்கும் பணி தீவிரம்: எதிர்கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றி என அறிவித்த காடி ஐசென்காட்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2026
06:09 pm

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்காட் பெற்றுள்ள நிலையில், கூட்டணி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து முக்கியப் பதவிகளுக்கான வேட்பாளர்களை அவர் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலுவான போட்டியாளரான முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்காட்டிற்குப் புதிய அரசை அமைக்க அதிபர் ஐசக் ஹெர்ஸாக் 6 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளார்.

சபாநாயகர் வேட்பாளர்

எதிர்க்கட்சிகள் கைகோர்ப்பு: சபாநாயகர் வேட்பாளர் யார்?

எதிர்க்கட்சி தலைவர்களான நப்தாலி பென்னட், யாயிர் கோலன், அவிக்டோர் லீபர்மன் மற்றும் யாயிர் லபிட் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு X தளத்தில் பதிவிட்டுள்ள காடி ஐசென்காட், 26-வது நெசெட்டின் (இஸ்ரேல் நாடாளுமன்றம்) சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் மத்தான் கஹானா வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனத்தெரிவித்தார்.

ராய் ஃபோக்மேன் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.

பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் அவிக்டோர் லீபர்மன் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்பார்.

லிரான் அவிசார் பென்-ஹோரின் நிதிக் குழுவின் தலைவராகச் செயல்படுவார்.

கெடு

6 வாரங்களில் அரசு அமைக்க கெடு

கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற்ற இஸ்ரேல் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி மற்றும் மதவாதக் கூட்டணி தனது பெரும்பான்மையை இழந்தது.

இருப்பினும், நெதன்யாகுவின் கட்சி தனிப்பெரும் தொகுதியாக உருவெடுத்த போதிலும், எந்தவொரு அமைப்பிற்கும் ஆட்சி அமைக்கப் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, அதிபர் ஹெர்ஸாக் முதல் வாய்ப்பைக் காடி ஐசென்காட்டிற்கு வழங்கியுள்ளார்.

வரும் புதன்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த நியமனங்கள் தொடர்பான முறையான ஒப்புதல்கள் பெறப்பட்டு, கூட்டணி அரசுக்கான இறுதிச் சட்டவடிவம் தயாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT